இலங்கை செய்தி

இலங்கை மதபோதகரின் ஆன்மீகத் தந்தை பாலியல் குற்றச்சாட்டில் கைது

இலங்கை மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள பிரபல ஜிம்பாப்வே மத போதகர் யூபர்ட் ஏஞ்சல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள பிரபல ஜிம்பாப்வே மத போதகர் யூபர்ட் ஏஞ்சல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூபர்ட் ஏஞ்சல் என அறியப்படும் இவரது உண்மையான பெயர் யூபர்ட் முட்சானிரே (Uebert Mudzanire) என்பதுடன், அவர் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளின் கீழ் தீர்க்கதரிசி யூபர்ட் ஏஞ்சல் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதை ஜிம்பாப்வே பொலிஸ் உறுதிப்படுத்துகிறது” என பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் ஆணையாளர் போல் நியாதியும் இந்தக் கைது தொடர்பான தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக ஜிம்பாப்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Spirit Embassy என்ற தேவாலயத்தை நிறுவிய யூபர்ட் ஏஞ்சல், அந்நாட்டின் பிரபல மதப் பிரமுகராக விளங்குவதுடன், ஜிம்பாப்வேயின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான விசேட தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, ஹராரே நகரில் நடைபெற்ற தேவாலய வழிபாட்டின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விபரங்கள், குறிப்பாக சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளங்கள் குறித்து பொலிஸார் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

யூபர்ட் ஏஞ்சல், சர்ச்சைக்குரிய இலங்கை மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளார். ஜெரோம் பெர்னாண்டோ, யூபர்ட் ஏஞ்சலை தனது ஆன்மீகத் தந்தை மற்றும் மத வழிகாட்டி எனப் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய நேர்காணல்களில், தனது மதப் பயணத்தில் யூபர்ட் ஏஞ்சல் முக்கிய பங்கு வகித்ததாகவும், தன்னை ஒரு தீர்க்கதரிசி என அடையாளப்படுத்திக்கொள்ள ஊக்குவித்ததாகவும் ஜெரோம் பெர்னாண்டோ ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், இலங்கையின் Daily Mirror பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில், தனது மகள் யூபர்ட் ஏஞ்சலின் மகனுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளதாகவும் ஜெரோம் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்விரு மத போதகர்களுக்கும் இடையிலான தொடர்பு ஏற்கனவே இலங்கையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை