உலகம் செய்தி முக்கிய செய்திகள்

UNRWA நிதி முடக்கம்; பாதாளத்துக்குச் செல்லும் அகதிகளின் வாழ்வாதாரம்

லெபனானில் வாழும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணிகள் முகவரகமான UNRWA வழங்கிவரும் சேவைகள், நிதி நெருக்கடி காரணமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான அகதிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

லெபனானில் வாழும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணிகள் முகவரகமான UNRWA வழங்கிவரும் சேவைகள், நிதி நெருக்கடி காரணமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான அகதிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிதி உதவிக் குறைப்புகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களில் இயங்கும் பாடசாலைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் 2025 பெப்ரவரியில் UNRWA அமைப்புக்கான நிதி முடக்கத்தைத் தொடரத் தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதனால், வேலைவாய்ப்புகள் குறைவடைந்துள்ளதுடன், மருத்துவ உதவிகளைப் பெறுவதிலும் அகதிகள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் நெரிசலான வகுப்பறைகளில் கல்வி கற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையால் குறைக்கப்படும் சேவைகள்
1950ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கு UNRWA அமைப்பு கல்வி, சுகாதாரம், நிவாரணம் மற்றும் சமூக சேவைகளை வழங்கி வருகின்றது.

லெபனானில் சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் லெபனான் குடியுரிமையற்றவர்களாகவும், பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்கொள்பவர்களாகவும் உள்ளனர்.

2026ஆம் ஆண்டுக்கான தனது செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மேலதிகமாக 70 முதல் 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக UNRWA பேச்சாளர் கடந்த ஒக்டோபரில் தெரிவித்துள்ளார்.

நிதிப் பற்றாக்குறை காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் சேவைகளுக்கான வேலை நேரம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026-2027 கல்வியாண்டில் பல பாடசாலைகளின் வாராந்த வகுப்புகள் ஐந்து நாட்களிலிருந்து நான்கு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.

லெபனானில் உள்ள 58 பாடசாலைகளில் 35,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

பெய்ரூட்டில் அமைந்துள்ள புர்ஜ் அல்-பராஜ்னே அகதிகள் முகாமில் பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், தற்போது ஒரு வகுப்பறையில் 40 அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ சேவைகளும் பாதிப்பு

UNRWA வெளியிட்ட 2026 ஜூன் மாத அவசரகால அறிக்கையின்படி, லெபனானில் இயங்கிவந்த 26 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 15 மட்டுமே தற்போது செயற்படுகின்றன. ஏனைய 11 நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், மருத்துவ உதவிகளை நம்பியிருக்கும் அகதிகள் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

முகாம்களில் அதிகரிக்கும் சமூகப் பிரச்சினைகள்

பொருளாதார நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக அகதிகள் முகாம்களில் குற்றச்செயல்கள், போதைப்பொருள் பாவனை மற்றும் அவற்றின் விநியோகம் அதிகரித்து வருவதாக உள்ளூர் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி