உலகம்

அமெரிக்காவில் ஜெட் ரக விமானம் விபத்து – 09 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்  கிரெஸ்ட்ஹேவன் (Cresthaven) அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில், விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று பிற்பகல் 12:50 மணியளவில் (ET நேரம் – 1750 GMT) இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 09 பேர் பயணித்த நிலையில் அவர்கள் அனைவரும் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியர்ஜெட் 60′ (Learjet 60) ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் டெக்சாஸில் உள்ள ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பஹாமாஸில் உள்ள நார்த் எலியூதெரா விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக FAA தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்