ஈரானில் பயணிகள் பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு
ஈரானில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய மார்க்கஸி மாகாணத்தில் உள்ள சவே-ஹமேதான் Saveh-Hamedan நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநரின் சோர்வும் தூக்கக் கலக்கமுமே விபத்திற்குக் காரணம் என மாகாண போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.
பேருந்து எங்கு சென்றுகொண்டிருந்தது என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ஈரானில் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 17000 பேர் வரை உயிரிழப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




