உலகம்

விர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சூத்திரதாரி கைது

  • August 16, 2026
  • 0 Comments

விர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 05 பேர் காயமடைந்துள்ள நிலையில்,  தாக்குதல்தாரி 14மணிநேரத்தின் பின் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான கேம்ரான் ஹாரிஸ் (Camron Harris) என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல்தாரி அலமாரியில் ஒளிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 முதல் 23 வயதுக்குட்பட்ட ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா

மகாராஷ்டிராவில் பிறந்தநாள் கேக்கை உட்கொண்ட 07 பேர் மருத்துவமனையில் அனுமதி

  • August 16, 2026
  • 0 Comments

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தநாள் கேக்கை உட்கொண்ட 07 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின்படி, அந்தக் குழுவினருக்கு உணவு நஞ்சூட்டல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, பிறந்தநாள் விழாவில் இருந்த அனைத்து உணவு மற்றும் பானங்களும் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டன. அதில், பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அதன்படி, கேக்கைத் தயாரித்த கடை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உணவு நஞ்சூட்டலால் பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலையும் தற்போது குணமடைந்துவிட்டதாக […]

ஐரோப்பா

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 500 பேர் கைது

  • August 16, 2026
  • 0 Comments

பிரான்ஸில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வேண்டுமென்றே தீ மூட்டியதாகவும், மீதமுள்ளவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள். ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை குரோஷியாவின் விடுமுறைத் தளமொன்றில் கடந்த […]

ஐரோப்பா

அயர்லாந்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலரின் நிலை கவலைக்கிடம்

  • August 16, 2026
  • 0 Comments

அயர்லாந்தில் நெடுஞ்சாலையில் பயணித்த கார் ஒன்று மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கில்டேர் கவுன்டியில் ( Kildare ) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் காயமடைந்த நால்வரில் குழந்தையொன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது காரின் பெண் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கைப் பயணி ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் , டல்லாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் Tallaght […]

ஐரோப்பா

ஹங்கேரியில் சாரதிக்கு ஏற்பட்ட சோர்வு – 12 பேர் உயிரிழப்பு

  • August 16, 2026
  • 0 Comments

ஹங்கேரியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஹங்கேரியின் மொஸ்செக் பகுதியில், பேருந்தொன்று  சாலையிலிருந்து விலகிச் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 57 பயணிகள் இருந்ததாகவும் கூறுப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

  • August 16, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (15) அதிகாலை கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 36 பேர் பலத்த காயங்களுடனும், 77 பேர் சிறு காயங்களுடனும் மீட்கப்பட்டனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து 341 பின் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல் போனவர்களின் சரியான […]

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை

புதிய உச்சம் – டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

  • August 16, 2026
  • 0 Comments

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,011  ஆக உயர்ந்துள்ள அதேநேரம் மரணங்களின் எண்ணிக்கை 68  ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிரங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அறிவிப்பின்படி, மேற்கு மாகாணத்தில் அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 48,725 தொற்றாளர்களத் மேற்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், இது பதிவு செய்யப்பட்ட சதவீத்தின்படி, 52.96 வீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு மாகாணத்தில் 13,533 நோய்த்தொற்றுகளுடன் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் […]

ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள வட ஆப்பிரிக்க பிராந்தியமான செவுட்டாவிற்குள் (Ceuta) சட்டவிரோதமாக நுழைய முயன்ற 111 பேரை மொராக்கோ பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். செய்தி முக்கிய செய்திகள்

ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்ற 111 பேர் மொராக்கோவில் கைது

  • August 16, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள வட ஆப்பிரிக்க பிராந்தியமான செவுட்டாவிற்குள் (Ceuta) சட்டவிரோதமாக நுழைய முயன்ற 111 பேரை மொராக்கோ பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக மீண்டும் பெருமளவில் ஊடுருவ அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்லையின் இருபுறமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூலை 30 அன்று 72,000-க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் செவுட்டா எல்லைக்குள் திடீரெனப் புகுந்தனர். அந்தப் பேரிடர் சம்பவத்தின் போது ஐரோப்பிய மண்ணை அடைய […]

கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொலம்பியாவில் பேரழிவு: வரிகளை இடைநிறுத்துமாறு ட்ரம்பிடம் கோரிக்கை

  • August 16, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்து பெரும் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில், கொலம்பியா பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைத் தற்காலிகமாக ரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கொலம்பியாவின் புதிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) கோரிக்கை விடுத்துள்ளார். நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள கொலம்பிய தொழிலதிபர்களுக்கும் வணிகர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், ஜூலை இறுதியில் 10%-லிருந்து 12.5%-ஆக […]

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டத்தை (Gun Buyback Scheme) நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடத் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம்: 2.74 லட்சம் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்ய முடிவு

  • August 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டத்தை (Gun Buyback Scheme) நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடத் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்துள்ளார். “இந்த விவகாரம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மிக முக்கியமானது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை, மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், தெருக்களில் […]