உலகம்

கூகுள் கட்டிடத்தின் வரவேற்பறைக்குள் தீக்குளித்த நபரால் பரபரப்பு

  • August 29, 2026
  • 0 Comments

லோயர் மன்ஹாட்டனில் உள்ள கூகுள் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தின் வரவேற்பறைக்குள் நபர் ஒருவர் தனக்கு தானே தீவைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு ஊழியர்கள் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது, அதேநேரம் காயங்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

ஐரோப்பா

நேபாளத்தை போலவே ஐரோப்பாவிற்கும் ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை

  • August 29, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தால், ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையானது பனிப்பாறைகளை வெகுவாக உருக வைக்கும் எனவும், கடல் நீர்மட்டம் உயர்ந்து பாரிய அனர்த்தம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் முன்னதாக எச்சரித்திருந்தனர். இதற்கிடையே அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பனிப்பாறை உருகியதால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது ஆல்ப்ஸ் மலைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரேமன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பனிப்பாறை […]

உலகம்

நைஜர் தலைநகரின் சில பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டதால் பரபரப்பு

  • August 29, 2026
  • 0 Comments

நைஜர் தலைநகர் நியாமியின் சில பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை மீதான தாக்குதல் குறித்த செய்திகளுக்கு மத்தியில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அதேநேரம் நைஜரின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான பானா வகானா இப்ராஹிம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, நாம் அமைதியாக இருப்போம், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்ப்போம்” என்று கூறியுள்ளார். “மீண்டும் ஒருமுறை நமது பாதுகாப்பு […]

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: தமிழரசுக் கட்சி எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு

  • August 29, 2026
  • 0 Comments

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. எமது நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை. […]

அமெரிக்காவுடனான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை ஈரானிய தலைவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி: ஒப்புக்கொண்டது ஈரான்

  • August 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை ஈரானிய தலைவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளனர். மக்களின் பொருளாதார கஷ்டங்களுக்குத் தீர்வு காணுமாறு அந்நாட்டின் உச்ச தலைவர் அரசாங்கத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தடைகள் மற்றும் முற்றுகை காரணமாக நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனினும், சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஈரான், அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்கொள்ளப் போவதாகவும், இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்வதோடு, உலகளாவிய எரிசக்தி சந்தையைக் கட்டுப்படுத்தும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் […]

ஐரோப்பா

இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்கு 21 வெள்ள எச்சரிக்கைகள் விடுப்பு

  • August 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வார இறுதியில் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் இரண்டு வெள்ள எச்சரிக்கைகளும், 21 வெள்ள அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்தின் 71.3 சதவிகிதப் பகுதிகளில் வறட்சி நீடித்த போதிலும் சடுதியாக மழை மற்றும் வெள்ளம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  பர்மிங்ஹாமில் Birmingham  ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தரைமட்ட வெள்ளம், டேம் […]

இலங்கை

மாவு சார்ந்த சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு

  • August 29, 2026
  • 0 Comments

பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட மாவு சார்ந்த சிற்றுண்டிகளின் விலையை 05 ரூபாவால் உயர்த்த தீர்மானித்துள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம், இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோதுமை மாவிற்கான விலை 17 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோதுமை மாவு விலை உயர்வு குறித்து விவாதிப்பதற்காக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய குழு அடுத்த திங்கட்கிழமை கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

22 சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது: சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது இலங்கை செய்தி

சர்வஜன வாக்கெடுப்பு: சட்டமா அதிபர் திணைக்களம் கூறியது என்ன?

  • August 29, 2026
  • 0 Comments

22 சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது: சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படாது எனச் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வட்டகல இத்தகவலை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அரசாங்கம் என்ன செய்யும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் […]

உலகம்

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் ஈரானின் எண்ணெய் கப்பல்கள்

  • August 29, 2026
  • 0 Comments

ஈரானின் 20 எண்ணெய் கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்குச் செல்ல முடியாமல், இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாக ‘டேங்கர் டிராக்கர்ஸ்’  ‘TankerTrackers’ இணையதளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொத்ரிகோ, இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்களை அரசாங்கம் கண்காணித்து வருவதாக கூறினார். இருப்பினும் சம்பந்தப்பட்ட கப்பல்கள் இலங்கையின் எல்லைக்கு வெளியே இருப்பதால், இது தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அந்தக் […]

ஐரோப்பா

கீவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 27 பேர் உயிரிழப்பு

  • August 29, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் ஆளில்லா விமானத் தாக்குதலால் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கீவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் டைமூர் தகாசென்கோ Tymur Tkachenko, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். “ரஷ்ய ஆளில்லா விமானங்கள் ஒரு கிடங்கைத் தாக்கியதால் ஏற்பட்ட வெடிப்பு, அப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது” […]