தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு?
தமிழ் பேசும் கட்சிகளுக்கான பொதுமேடையில் ஏனைய தமிழ் பேசும் கட்சிகளை இணைப்பதற்கு முயற்சி எடுக்கப்படும். அவர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள பொதுமேடைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்வாங்கப்படாமை தொடர்பில் ஊடக சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“பொது அமைப்புக்கான முதல் படியே நேற்று எடுக்கப்பட்டது. எனவே, ஏனைய விடயங்கள் பற்றி இனிதான் பேசப்படும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.




