சர்வதேச சட்டங்களை மீறிவிட்டது பிரித்தானியா: ஈரான் கடும் கண்டனம்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பாதுகாப்பு அச்சுறுத்தல் அமைப்பாக பிரித்தானியா அறிவித்துள்ளமை நியாயமற்றது:பொறுப்பற்றது – என சுட்டிக்காட்டி, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது ஈரான் வெளிவிவகார அமைச்சு.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) என்பது ஈரானிய ஆயுதப் படைகளின் அதிகாரப்பூர்வமான ஒரு அங்கமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சு, ஒரு நாட்டின் அரசு நிறுவனத்தை இவ்வாறு இலக்கு வைப்பதன் மூலம் பிரித்தானியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்களது உளவு வேலைகள் மற்றும் நாச வேலைகளுக்குப் (proxies) குழுக்களை பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய சட்ட அதிகாரங்களின் கீழ், ஈரான் புரட்சிகர காவல்படை மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுவிற்கான ஆதரவைத் தடை செய்வதாக பிரிட்டன் திங்கட்கிழமை அறிவித்திருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டுள்ள ஈரான், தாங்கள் எந்தவொரு proxies குழுக்களையும் பயன்படுத்தவில்லை என்று ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




