ஞானசார தேரருக்கு VIP பாதுகாப்பா?
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பௌத்த மதகுருமார் உட்பட 11 தனிநபர்களுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அமைச்சரவைப் பேச்சாளரும் , அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் (14) நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு நிராகரித்துள்ளார்.
“ ஊடக அறிக்கைகளில் பெயரிடப்பட்டிருந்த நபர்கள் எவருக்கும் எந்தவொரு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படவில்லை.
அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யூ. கமகே, சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்தும பண்டார, எச்.ஏ. தர்மசேன மற்றும் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு விஐபி பாதுகாப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது குறித்து கருத்து வெளியிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ,
“ சம்பந்தப்பட்ட நபர்கள் எவருக்கும் சிறப்பு அல்லது பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு , அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.” – என்றார்.




