அரசியல் இலங்கை செய்தி

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை: சஜித் அணி

"தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை."

” தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவே இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் பி. திகாம்பரம் ஆகியோரின் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்துள்ளனர். இது எதிர்க்கட்சிக்கோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணிக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்த விடயம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அவர் எப்போதும் இம்மக்களின் பிரச்சினைகளில் மிகுந்த அவதானத்துடன் இருந்து வருகின்றார்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை