காங்கோவில் வசிக்கும் அமெரிக்கர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை!
காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா நோய் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், அங்கிருக்கும் அமெரிக்கர்களை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) ஆதரவளித்து வருகிறன. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள பல அமெரிக்கர்கள், சந்தேகிக்கப்படும் எபோலா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் . அவர்களில் சிலர் அதிக ஆபத்துள்ளவர்களாகக் கருதப்படுவதுடன், குறைந்தபட்சம் ஒருவருக்காவது அறிகுறிகள் தென்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]













