உலகம் செய்தி

தெற்கு லெபனானில் மேலும் நான்கு கிராமங்களுக்கு இஸ்ரேலின் கட்டாய இடப்பெயர்வு உத்தரவு

  • May 30, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் மேலும் நான்கு கிராம மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் கட்டாய இடப்பெயர்வு உத்தரவை பிறப்பித்துள்ளது. சிடோன் மற்றும் டயர் நகரங்களுக்கு இடையிலும், பெக்கா பள்ளத்தாக்குப் பகுதிக்கும் அருகிலும் அமைந்துள்ள ஜ்தெய்தெத் அன்சார், ஜ்ராரியே, மஸ்ராத் கௌதரியத் எல்-ரெஸ் மற்றும் மஷ்கரா ஆகிய பகுதிகளின் குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலியப் படைகள் தாங்கள் “பாதுகாப்பு இடைமண்டலம்” எனக் குறிப்பிடும் பகுதிக்கு அப்பாலும் தாக்குதல்களை விரிவுபடுத்தி வருவதாகக் கூறி, பொதுமக்கள் சிடோனுக்குத் தெற்கே உள்ள […]

உலகம் செய்தி

ஆசியாவை அமெரிக்கா புறக்கணிக்காது : பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தல்

  • May 30, 2026
  • 0 Comments

ஈரான் போர் உள்ளிட்ட உலகளாவிய பாதுகாப்பு பொறுப்புகளை அமெரிக்கா மேற்கொண்டிருந்தாலும், ஆசியப் பிராந்தியத்தை புறக்கணிக்கவில்லை என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில்  உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார் . தைவான் தொடர்பான ஆயுத ஒப்பந்தங்களில் ஏற்பட்ட தாமதங்களைத் தொடர்ந்து, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு அர்ப்பணிப்பு தொடரும் என்றும், ஆயுத ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை, பிராந்திய நாடுகள் தங்களது […]

இலங்கை செய்தி

சிவனொளிபாத யாத்திரைக் காலம் நிறைவு

  • May 30, 2026
  • 0 Comments

சிவனொளிபாத யாத்திரைக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக ஸ்ரீபாத விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பாத உடமலுவவில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளான 31 ஆம் திகதி, ஸ்ரீபாத உட மலுவவில் நடைபெறும் சமயக்கிரியைகளைத் தொடர்ந்து, மேல் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள புனிதப் பேழை, சமன் தெய்வ சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியவை கல்பொத்தாவல பெல்மதுளையில் உள்ள ஸ்ரீபாத ராஜமகா […]

இந்தியா செய்தி

புகையிலை பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழப்பு 

  • May 30, 2026
  • 0 Comments

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நுரையீரல் நிபுணர் மருத்துவர் நரசிம்மன் தெரிவித்ததாவது, “உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே 31 ம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இளைஞர்களை புகையிலை மற்றும் நிக்கோட்டின் பழக்கத்திலிருந்து பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புகையிலை நேரடியாக உட்கொள்வது மூலமாகவும், 16 இலட்சம் பேர் மறைமுகமாகவும் […]

இலங்கை செய்தி

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

  • May 30, 2026
  • 0 Comments

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நேற்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

உலகம்

FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டி : ஆப்பிரிக்க பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!

  • May 30, 2026
  • 0 Comments

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மெக்சிகோ விமான நிறுவனங்கள் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளன. விவா , வோலாரிஸ் மற்றும் ஏரோமெக்சிகோ ஆகிய விமான நிறுவனங்களே இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளன. கால்பந்து உலகக் கோப்பைக்காக பெருமளவான இரசிகர்களை வரவேற்க மெக்சிகோ தயாராகி வருகின்ற நிலையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய “கடந்த 21 நாட்களுக்குள் உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு அல்லது தெற்கு சூடானில் தங்கியிருந்த பயணிகள் விமானம் மூலம் மெக்சிகோவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

அறிந்திருக்க வேண்டியவை உலகம்

எவரெஸ்ட் சிகரத்தின் மரண மண்டலத்தை அடைய முயன்ற 05 பேர் உயிரிழப்பு!!

  • May 30, 2026
  • 0 Comments

உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடையும் முயற்சியில் இரண்டு இந்தியர்கள் உள்பட 05 பேர் உயிரிழந்துள்ளனர். 8,849 மீட்டர் உயரமுள்ள இந்த மலையில், 8000 மீட்டருக்கு மேல் உள்ள பகுதி ‘மரண மண்டலம்’ (Death Zone) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில், மனித உடல் படிப்படியாகச் செயலிழக்கத் தொடங்குகிறது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மண்டலத்தில் மட்டும் 340-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இந்த வருடத்தில் 05 […]

உலகம்

மத்தியக்கிழக்கில் நிரந்தர அமைதி எப்போது நிலவும்? விரைவில் தீர்மானம்!

  • May 30, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். ட்ரம்பின் கொள்கைகளுக்கும், அமெரிக்காவின் நலன்களுக்கும் சாதகமான ஒரு முடிவையே ட்ரம்ப் எடுப்பார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தம் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் போர் நிறுத்தத்திற்கு ஏதுவான ஒரு ஒப்பந்தத்தை எட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விரு […]

இலங்கை செய்தி

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

  • May 30, 2026
  • 0 Comments

புத்த பெருமான் அருளிய போதனைகளுக்கமைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்ட, பௌதீக பூசைகளை விடப் பௌத்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற அர்த்தமுள்ள வெசாக் பண்டிகையாக இந்த வெசாக் பண்டிகை அமைய வேண்டும் என இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “வெளி உலகை ஒளிபெறச் செய்வதைப் போலவே, எமது இதயங்களையும் அன்பு, கருணை, அறிவு ஆகியவற்றைக் கொண்டு ஒளிபெறச் செய்வதற்கு இந்த வெசாக் காலத்தை […]

இலங்கை செய்தி

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

  • May 30, 2026
  • 0 Comments

வெசாக் தினம் என்பது ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாகவும் விளங்குவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ​தெரிவித்துள்ளார். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். […]