FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டி : ஆப்பிரிக்க பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மெக்சிகோ விமான நிறுவனங்கள் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளன.
விவா , வோலாரிஸ் மற்றும் ஏரோமெக்சிகோ ஆகிய விமான நிறுவனங்களே இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளன.
கால்பந்து உலகக் கோப்பைக்காக பெருமளவான இரசிகர்களை வரவேற்க மெக்சிகோ தயாராகி வருகின்ற நிலையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய “கடந்த 21 நாட்களுக்குள் உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு அல்லது தெற்கு சூடானில் தங்கியிருந்த பயணிகள் விமானம் மூலம் மெக்சிகோவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு 60 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொடிய எபோலா வைரஸ் பரவலுடன் போராடி வரும் காங்கோ ஜனநாயகக் குடியரசு, கால்பந்து உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளதுடன், முதல் சுற்று போட்டிகள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




