இலங்கை செய்தி

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

  • May 30, 2026
  • 0 Comments

வெசாக் தினம் என்பது ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாகவும் விளங்குவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ​தெரிவித்துள்ளார். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். […]

இலங்கை செய்தி

புனித வெசாக் பூரணை தினம் இன்று

  • May 30, 2026
  • 0 Comments

புத்த பெருமானின் முப்பெரும் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் புனித வெசாக் பூரணை தினம்  இன்றாகும். புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் மறைவு இந்த வெசாக் பூராணை தினத்திலேயே இடம்பெற்றுள்ளது. மிகுந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த வெசாக் பூராணை தினம்,  உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.

இலங்கை

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் 33 கைதிகள் விடுதலை!

  • May 30, 2026
  • 0 Comments

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் 33 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 31 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் 33 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது

  • May 29, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் மே 28ஆம் திகதி வரை மொத்தமாக 1,010,807 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மே மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரை மட்டும் 134,530 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் […]

உலகம் செய்தி

போலி வெற்றிக்காக தகவல் திரிப்பு – ட்ரம்பின் ஒப்பந்தக் கூற்றுகள் ஈரானால் நிராகரிப்பு

  • May 29, 2026
  • 0 Comments

ஈரானுடனான சாத்தியமான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துகளை, ஈரானிய வட்டாரங்கள் சந்தேகத்துடன் எதிர்கொண்டுள்ளன. ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான Fars News Agency வெளியிட்ட தகவலின்படி, “நம்பகமான வட்டாரங்கள்” ட்ரம்பின் அறிக்கையை “உண்மையும் பொய்யும் கலந்த ஒன்று” என்று விமர்சித்துள்ளன. Truth Social தளத்தில் வெளியிட்ட தனது பதிவில், ட்ரம்ப் வரைவு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் திரித்துக் கூறியுள்ளதாகவும், அது ஒரு “போலி வெற்றியை” உருவாக்கும் முயற்சி என்றும் […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் எந்த இறுதி ஒப்பந்தமும் இல்லை – ஈரான் விளக்கம்

  • May 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் இதுவரை எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வந்தாலும், எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணையில் நிர்வாகம் மற்றும் அதனைச் சார்ந்த முடிவுகள் குறித்து ஈரானும் ஓமானுமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பான மேலதிக […]

உலகம் செய்தி

ருமேனியாவில் குடியிருப்பில் மோதிய ட்ரோன்: இருவர் காயம் – ரஷ்யாவுக்கு நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

ருமேனியாவின் கிழக்கு பகுதியிலுள்ள கலாட்டி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்ய ஆளில்லா விமானம் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. நேட்டோ பொதுச்செயலாளர், “ரஷ்யாவின் பொறுப்பற்ற நடவடிக்கை அனைவருக்கும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத் தலைவர், “மாஸ்கோவின் ஆக்கிரமிப்புப் போர் இன்னொரு எல்லையைத் தாண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். […]

உலகம் செய்தி

கடுமையான இஸ்ரேலிய கட்டுப்பாடுகளையும் மீறி அல்-அக்ஸாவில் 60,000 பலஸ்தீனியர்கள் தொழுகை

  • May 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தபோதிலும், சுமார் 60,000 பலஸ்தீனியர்கள் வெள்ளிக்கிழமை அல்-அக்ஸா மசூதியில் தொழுகையில் கலந்துகொண்டனர். ஜெருசலேமின் பழைய நகரம் மற்றும் மசூதி வளாக நுழைவாயில்களில் இஸ்ரேலியப் படைகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியிருந்ததாக இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் மசூதி முற்றங்களுக்கு வரத் தொடங்கினர். பழைய நகரம் முழுவதும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டதுடன், மசூதி வாயில்கள் மற்றும் ஜெருசலேம் சுற்றியுள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. வழிபாட்டாளர்களின் அடையாள அட்டைகள் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் வெப்ப உயர்வால் அதிகரிக்கும் மரணங்கள்! சிறுவன் உயிரிழப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர் நிலைகளில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை என்றும், இதுகுறித்த அறிக்கை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்படும் என்றும் ஸ்காட்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளுக்கு வெப்பநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலைமையானது நீர் தொடர்பான மரணங்கள் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத் துறையில் இலங்கை சாதனை: சர்வதேசப் பட்டியலில் 18-வது இடம்!

  • May 29, 2026
  • 0 Comments

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் இலங்கை, சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ளது. அத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா ஊடகமான TTW – Travel and Tour World வெளியிட்டுள்ள “2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த 50 பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள்” என்ற மதிப்புமிக்க சர்வதேசப் பட்டியலில் இலங்கை 18-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்படி சர்வதேசப் பட்டியலில் இந்தியா, பிரான்ஸ், பெரு, ஸ்பெயின் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் முன்னிலை […]