பாலஸ்தீன தலைவருக்கு அமெரிக்கா கதவடைப்பு!
அமெரிக்காவில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கச் சென்ற பாலஸ்தீன கால்பந்து சங்கத் தலைவர் மற்றும் சில நாடுகளின் பிரதிநிதிகளுக்கு Visa மறுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை ஒன்றிணைக்கும் நிகழ்வாக FIFA தொடர் கருதப்பட்டாலும், அமெரிக்க அரசு சில வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கத் தயக்கம் காட்டி வருகிறது.
இந்த விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது என்றும், அந்தந்த நாட்டு அரசாங்க விதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் FIFA தலைவர் Gianni Infantino தெரிவித்துள்ளார்.
கால்பந்து வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இத்தகைய தடைகளை விதிப்பது நீதியற்றது என பாலஸ்தீனத் தலைவர் ஜிப்ரில் ரஜூப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
போட்டியை நடத்தும் நாடுகள் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்படும் என்று முன்னர் உறுதியளித்திருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் சர்வதேச விளையாட்டுப் பிரியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.




