உலகம்

உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல்  டிரில்லியனர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார்.

வால் ஸ்ட்ரீட்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வர்த்தக பங்குகள் உயர்ந்ததை தொடர்ந்து இந்த சாதனையை அடைந்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் $150 டொலரில் வர்த்தகத்தைத் தொடங்கின.  நாஸ்டாக் அறிமுகத்திற்குப் பிறகு 11 சதவீதம் உயர்ந்த இந்தப் பங்குகள், நிறுவனத்தின் மதிப்பை சுமார் $1.96 டிரில்லியனாக உயர்த்தியுள்ளன.

சில நிமிடங்களுக்குள், பங்கின் விலை 20 சதவீதம் உயர்ந்து $164  ஆனது.

இது, வால் ஸ்ட்ரீட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் 10 இடங்களுக்குள் ஸ்பேஸ்எக்ஸை கொண்டு வந்தது.

உலக மக்கள்தொகையில் மிகவும் ஏழ்மையான 3.8 பில்லியன் மக்களின், மொத்த செல்வத்தை விட மஸ்க் தற்போது அதிக சொத்துக்களை கொண்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் (Oxfam ) அமெரிக்கா கூறியுள்ளது.

 

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்