ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து அணியின் விளையாட்டு உபகரணங்கள் கொள்ளை!!

  • June 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியிடம் இருந்து 18,000 அமெரிக்க டொலர் (23,120 சிங்கப்பூர் டொலர்) மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகளைத் திருடியது தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேநேரம் முஸ்தபா சாலிக் (Mustafa Salik)  மற்றும் எர்ஃபான் கமல்   (Erfan Kamal) ஆகியோர் திருடப்பட்ட சொத்துக்களைப் பெற்றுக் கொண்டமைக்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மேற்படி திருட்டு சம்பவத்திற்காக மிசௌரி சட்டத்தின் கீழ்,   ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என ஜாக்சன் […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன், ஜப்பானுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • June 14, 2026
  • 0 Comments

பிரிட்டனும், ஜப்பானும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 18 பில்லியன் பவுண்டுகள் (£18bn) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளன. அடுத்த வாரம் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரிட்டன் பிரதமர் Keir Starmer , ஜப்பானிய பிரதமர் Sanae Takaichi ஞாயிற்றுக்கிழமையன்று டவுனிங் ஸ்ட்ரீட்டில் Downing Street வரவேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது, 9 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கடலோர காற்று ஆலை ஒப்பந்தம் உட்பட, வணிக மற்றும் அரசாங்க ரீதியிலான […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய சிறுமிக்கு பாகிஸ்தானில் நடந்த கொடூரம்!

  • June 14, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி வியாழக்கிழமை, பாகிஸ்தானின் சக்வால் நகரில், Hania Ahmed என்ற சிறுமி காவல்து றையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மேற்கு ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய சங்கம் தெரிவித்துள்ளது. “இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதிலும் குறிப்பாக 9 வயது சிறுமியின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது” என்று மேற்கு ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆசிம் சௌத்ரி […]

செய்தி விளையாட்டு

பிரேசிலுக்கு தடுப்பு அணை அமைத்த மொராக்கோ!

  • June 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் மொராக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. ஆட்டத்தின் தொடக்கத்தில் இஸ்மாயில் சைபாரி மொராக்கோவிற்காக முதல் கோல் அடிக்க, பின்னர் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் ஒரு அபாரமான கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். புதிய பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி தலைமையில் களமிறங்கிய பிரேசில் அணி, நெய்மர் இல்லாத குறையை உணர்ந்ததோடு வெற்றிக்காகக் கடுமையாகப் போராடியது. கடந்த கால ஜாம்பவான்கள் […]

செய்தி விளையாட்டு

28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிக் கனியை ருசித்த Scotland!

  • June 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்காட்லாந்து அணி, ஹைட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஜான் மெக்கின் அடித்த கோல் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பைக்குத் திரும்பிய ஸ்காட்லாந்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து குழு ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பையில் பெற்ற முதல் வெற்றி இது என்பதால், அந்நாட்டு ரசிகர்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெருமளவில் திரண்டு […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: ஹார்முஸ் நீரிணை திறப்பு!

  • June 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (14) கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாகத் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் வெ ளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ, தயாரிப்பதையோ அல்லது வேறு எந்த வழியிலும் அணு ஆயுதப் பொருட்களைப் பெறுவதையோ இந்த ஒப்பந்தம் நிரந்தரமாகத் தடுக்கும். […]

இலங்கை

அனுரவுக்கு அவசர கடிதம்!!

  • June 13, 2026
  • 0 Comments

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக முன்னாள் எம்.பிகள் சிலர் ஜனாதிபதி அனுரகுமரா திஸாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில்,  நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னர் பொலிஸ் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட அந்த காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான வடுக்கள், இந்த ஜனநாயக நாட்டில் மீண்டும் பதிவாகக் கூடாது […]

உலகம்

ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான நாடுகளுக்கு கடத்திய ட்ரம்ப் நிர்வாகம்!

  • June 13, 2026
  • 0 Comments

ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்களை மத்திய ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பிரஜைகள் அந்நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே வழக்கறிஞர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை மரண தண்டனை என விவரித்துள்ளனர். உள்நாட்டுப் போர், ரஷ்ய துணை ராணுவப் படைகளின் இருப்பு, மற்றும் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு மொழித் திறனோ அல்லது தொடர்புகளோ இல்லாதது உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அபாயங்களை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்படி நாடு கடத்தலுக்காக […]

ஐரோப்பா

இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகம் – நாட்டிங்ஹாம் நகர மையம் சுற்றிவளைப்பு!

  • June 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் (Nottingham) நகர மையத்தில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளதுடன், லேஸ் மார்க்கெட் சதுக்கத்தை மூடியுள்ளனர். அத்துடன் ஆடம்ஸ் வாக் ( Adams Walk ) சாலையிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரை ஒரு இளம் பெண் என்று மட்டுமே விவரிக்கும் காவல்துறை, அவருக்கு அதிகாரிகள் உதவி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் […]

ஐரோப்பா

பெல்ஃபாஸ்டில் நீடித்த வன்முறையை தொடர்ந்து ஒன்றுக்கூடிய மக்கள்!

  • June 13, 2026
  • 0 Comments

அண்மையில் பெல்ஃபாஸ்டில் (Belfast) இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இன்று  இனவெறி எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றுள்ளது. இதில்  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். ‘இனவெறிக்கு எதிராக ஒன்றிணைவோம்’ (Unite Against Racism) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி  பெல்ஃபாஸ்ட் நகர மன்றத்திற்கு வெளியே நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்ட பலரும், “இனவெறியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்”, மற்றும் “பிரச்சனை தீமையும் வன்முறையுமே தவிர, இனம் அல்ல” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.