ஈரான் பறக்கிறார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி Mohsin Naqvi , ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராகச்சியை சந்திப்பதற்காகத் தெஹ்ரானுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உயர்நிலைச் சந்திப்பு குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நிரந்தர அமைதிக்குரிய ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே இந்த முக்கியப் பயணம் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்துவதே இந்த வருகையின் முதன்மை நோக்கமாகும்.
இந்த சந்திப்பு பிராந்திய அளவில் நிலவும் அரசியல் பதற்றங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.




