உலகம் செய்தி

மீண்டும் பதற்றம்: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

  • June 1, 2026
  • 0 Comments

தெற்கு ஈரானில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக விமானப்படை தளமொன்று இலக்குவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் தீவில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய ஒரு மணி நேரத்திற்குள் இந்த எதிர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க தளத்தின் மீது ஈரானிய போர் விமானங்கள் குண்டுவீசி அங்கிருந்த இலக்குகளை அழித்துள்ளன. இந்த மோதல்களின் பின்னணியில், அண்டை நாடான […]

உலகம்

மியான்மாரில் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் வெடி விபத்து! பலர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

மியான்மாரில் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காங் டாட் ( Kong Tat) கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தற்செயலாக வெடித்ததே இதற்குக் காரணம் என கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் 25 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் உட்பட குறைந்தது 55 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளன. “வெடி விபத்தின் விளைவாக உயிரிழந்தவர்கள், […]

உலகம் கல்வி

காசாவிலும் இஸ்ரேல் கோரத் தாக்குதல்!

  • June 1, 2026
  • 0 Comments

காசா நகரின் மீன்பிடித் துறைமுகம் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், Al-Hatabiya மற்றும் Beit Lahiya போன்ற பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. காசாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்களால் உயிரிழப்புகளும் காயங்களும் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும் அதனை மீறி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருகின்றது.

ஆஸ்திரேலியா செய்தி

” புலம்பெயர் இலங்கையர்களின் நம்பிக்கையை சிதைக்கமாட்டோம்”

  • June 1, 2026
  • 0 Comments

  ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்களால் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் இதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டார். தற்போதைய அரசாங்கத்தினால் அதற்காக எடுக்கப்பட்டுள்ள முற்போக்கான தீர்மானங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார். புதிய அரசாங்கத்தின் மீது புலம்பெயர் இலங்கையர்கள் வைத்துள்ள தளராத நம்பிக்கைக்காக அமைச்சர் நன்றி […]

உலகம்

எபோலா தொற்று சந்தேகம் : பிரேசிலில் இருவர் தனிமைப்படுத்தலில்!

  • June 1, 2026
  • 0 Comments

எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் இருவர் பிரேசிலில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ நகரங்களைச் சேர்ந்த இருவர், தனிமைப்படுத்தல் செயல்முறையின் கீழ் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காய்ச்சல் உள்ளிட்ட லேசான அறிகுறிகளைக் காட்டியதைத் தொடர்ந்து, உகாண்டாவிலிருந்து வந்த பெல்ஜியம் மற்றும் காங்கோ நாட்டவர்களே மேற்படி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பட்டுள்ளனர். அவர்கள் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனை முடிவுகள் அடுத்த வாரம் கிடைக்கும் […]

செய்தி விளையாட்டு

மீண்டும் சாம்பியனாக மகுடம் சூடியது RCB!

  • June 1, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள […]

இலங்கை

தானசாலையில் வரிசையில் இருந்த மக்கள் மீது மோதிய கார்!! 06 பேர் உயிரிழப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

மீகொடவில்  வெசாக்கை முன்னிட்டு தானம் பெற காத்திருந்த மக்கள் கூட்டத்தினர் மீது கார் ஒன்று மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவெலவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாடகைக் கார் ஒன்று, மீகோடா சந்தியில்  தானசாலையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது  வரிசையில் இருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 […]