செய்தி விளையாட்டு

மீண்டும் சாம்பியனாக மகுடம் சூடியது RCB!

IPL 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோஹ்லி மற்றும் வெங்கடேஷ் ஐயர் (32) ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.

இறுதிப்போட்டியில் விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி, வெறும் 25 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் தனது அதிவேக அரை சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார்.

இறுதிவரை களத்தில் நின்ற கோஹ்லி 42 பந்துகளில் 75 ஓட்டங்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்து, 12 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி