ஐரோப்பா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயரும் என பிரித்தானியாவின் RAC அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் மொத்த எரிபொருள் விலைகள் லிட்டருக்கு சுமார் 5 பென்ஸ் உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வால் ஒரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான காருக்கு எரிபொருள் நிரப்பும் செலவு  £3.30 பவுண்ஸ் ஆக அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வின் தாக்கம் இன்னும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நுகர்வோரிடம் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை.

இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை 157 பென்ஸாகவும், டீசல் விலை 188 பென்ஸாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கமைய வரும் வாரங்களில் எண்ணெய் மற்றும் மொத்த எரிபொருள் விலைகள் மேலும் உயரும் எனவும், இது தவிர்க்க முடியாததது என்றும் RAC அமைப்பு தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்