போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதா? : பீட் ஹெக்ஸெத் பதில்!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் (Pete Hexath) தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையும், வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ நடவடிக்கையும் இரண்டு தனித்தனி செயல்முறைகள் என்றும் அவர் இதன்போது விளக்கியுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்வோம். அதை மிகவும் ஆக்ரோஷமாகச் செய்வோம் என்றும் கூறினோம். நாங்கள் அதைச் செய்துள்ளோம். ஈரானுக்கு அது தெரியும்.
இறுதியில், ஒரு சம்பவம் போர் நிறுத்த மீறலாக மாறுமா என்பதை ஜனாதிபதிதான் முடிவு செய்வார்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், போர் நிறுத்தத்தின் வரம்புகளை மீற வேண்டாம் என்றும், தனது நடவடிக்கைகளில் விவேகத்துடன் செயல்படுமாறும் அவர் ஈரானை வலியுறுத்தினார்.




