ஈரான் படைகள் உஷார் நிலையில்
ஈரான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளன என்று அந்நாட்டு உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் கதீர் நெஜாமி (Ghadir Nezami) எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடன் அமைதி பேச்சுகள் நடத்தப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே அவர் இவ்வாறானதொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் Brics நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக Ghadir Nezami புதுடெல்லி வந்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன எனவும் Ghadir Nezami சுட்டிக்காட்டியுள்ளார்.




