மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலிட பல நாடுகள் விருப்பம்!
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய, சீன நிறுவனங்கள் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக துறைமுகங்கள். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டம், மத்தலவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை இயக்குவதற்கான விரும்பும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலங்கை அரசாங்கம் கேள்விப்பத்திரங்களைக் கோரியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையால் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆரம்பத்தில் 47 தரப்பினர் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதாகவும், அவர்களில் மத்திய கிழக்கைச் சேர்ந்த சில நன்கு அறியப்பட்ட நிறுவனங்களும் அடங்குவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




