ஐரோப்பா

நேட்டோவை கலைக்கும் முழுவீச்சில் ட்ரம்ப்!! ஸ்பெயினுக்கு அச்சுறுத்தல்!

  • May 1, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க நேட்டோ நட்பு நாடுகள் உதவாத நிலையில் கடும் விமர்சனங்களை வெளியிட்ட அவர் தற்போது இவ்வாறு அச்சுறுத்தியுள்ளார். மேலும், ஜெர்மனியில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும், நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஸ்பெயின் மீது வர்த்தகத் தடை விதிப்பதாக அச்சுறுத்தியிருந்தமை குறிப்படத்தக்கது.  

இலங்கை செய்தி

திறைசேரி சம்பவம் – நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம் குறித்து ஆராய விசேட குழு 

  • May 1, 2026
  • 0 Comments

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, நான்கு சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்தலின் போது, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாவது தரப்பினருக்கு கைமாறிய சம்பவம் தொடர்பாக, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் […]

உலகம்

53 ஆப்பிரிக்க நாடுகளுக்கான இறக்குமதி வரி இரத்து : சீனாவின் அதிரடி நடவடிக்கை!

  • May 1, 2026
  • 0 Comments

சீனா 53 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை ரத்து செய்துள்ளது. இதன் மூலம், கண்டத்தில் உள்ள ஒரே ஒரு நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் வரியில்லா அணுகலை வழங்கியுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த கொள்கை, பெய்ஜிங்குடன் முறையான தூதரக உறவுகளைப் பேணிவரும் நாடுகளுக்குப் பொருந்தும். அதேநேரம் தைவானுடன் உறவுகளை கொண்டுள்ள எஸ்வதினிக்கு மாத்திரம் இந்த கொள்கை பொருந்ததாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கப் பொருட்களை  போட்டித்தன்மை மிக்கதாக மாற்றுவதற்கும், ஆப்பிரிக்காவிற்குள் […]

செய்தி தமிழ்நாடு

அதிர்ச்சியில் சென்னை மக்கள் – அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை 

  • May 1, 2026
  • 0 Comments

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 19 கிலோ கிராம் நிறையுடைய வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் […]

உலகம் செய்தி

மேற்குக் கரையில் இஸ்ரேல் பெரும் தாக்குதல்- ஒருவர் காயம், பலர் கண்ணீர்ப்புகையால் பாதிப்பு

  • May 1, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததுடன், பலர் கண்ணீர்ப்புகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரமல்லாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புர்கா கிராமத்திற்குள் இஸ்ரேலிய படைகள் திடீரென நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் ரப்பர் பூசப்பட்ட உலோகத் தோட்டாக்கள் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் ரப்பர் தோட்டாக்கள் தாக்கியதில் காயமடைந்துள்ளார். மேலும், கிராம மக்கள் பலர் கண்ணீர்ப்புகை […]

அரசியல் இலங்கை செய்தி

சமஷ்டி கட்டமைப்பிலான புதிய அரசமைப்பு வேண்டும்: தமிழரசுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்!

  • May 1, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் சார்பில் 10 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய உழைப்பாளிகள் தினப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அந்தப் பிரகடனத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:- சம்பள உயர்வு: பொருளாதாரச் சிக்கல், ‘டித்வா’ புயல் மற்றும் மேற்காசிய போர்ச் சூழலால் வீழ்ச்சியடைந்துள்ள ரூபாவின் பெறுமதியைக் கருத்திற்கொண்டு, நாளாந்தச் சம்பளம் பெறுவோரின் ஊதியம் கணிசமாக […]

செய்தி தமிழ்நாடு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுகவின் சித்து விளையாட்டுகள்

  • May 1, 2026
  • 0 Comments

மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சி முகவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “தமிழ்நாட்டில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ம் திகதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானதுதான் […]

உலகம் செய்தி

போலித் தகவலை வெளியிடும் பென்டகன்: ஈரான் சுட்டிக்காட்டு!

  • May 1, 2026
  • 0 Comments

போர் செலவீனம் தொடர்பில் அமெரிக்காவின் பென்டகன் Pentagon தவறான தகவல்களை வெளியிடுவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சுட்டிக்காட்டியுள்ளார். பென்டகன் வெளியிட்ட செலவீனத்தைவிட போருக்கான அமெரிக்காவின் உண்மையான பொருளாதாரச் செலவு நான்கு மடங்கு அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் போர் நடவடிக்கைகளால் அமெரிக்காவில் வரி செலுத்தும் மக்கள் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ளனர். ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பமும் மாதந்தோறும் 500 டாலர்களை இழக்கின்றன என ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi […]

ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் !

  • May 1, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள துவாப்சே (Tuapse) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது. துவாப்சே மீதான தாக்குதல்கள் சுற்றுச்சூழல் அவசரநிலைக்கு வழிவகுத்துள்ளன. அங்கு வசிப்பவர்கள் “பேரழிவு நிலைமைகள்” நிலவுவதாகவும், எண்ணெய் காற்று, மண் மற்றும் கருங்கடலை மாசுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ரஷ்ய ஆளில்லா விமானங்கள் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடெசாவைத் தாக்கியதில், குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 09 ஆம் திகதியன்று  வெற்றி தினக் கொண்டாட்டத்தை […]

உலகம் செய்தி

ஈரானால் இனி முடியாது: ஒப்பந்தம் செய்ய துடிக்கிறது என்கிறார் ட்ரம்ப்!!

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை செய்து கொள்ள ஈரான் அதிக விருப்பம் கொண்டுள்ளது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “போர்நிறுத்தத்தை மீறுவதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களா?” என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “போரை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் ஈரான் பாதுகாப்புப் படைகளின் திறன்களை கடுமையாகப் பலவீனப்படுத்தியுள்ளன. ஈரானின் கடற்படை அழிந்துவிட்டது. விமானப்படை அழிந்துவிட்டது. அதேபோல ஆளில்லா விமான […]