உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் “இயற்கை உரிமை” – துணை நாடாளுமன்ற சபாநாயகர் கருத்து

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை குறித்த புதிய கருத்துகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரானிய துணை நாடாளுமன்ற சபாநாயகர் அலி நிக்ஸாத், ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த ஈரானுக்கு இயற்கை உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நீர்வழிப்பாதை அதன் முந்தைய நிலைக்கு மீண்டும் செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார். “ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை அல்ல; அது ஈரானின் இயற்கை உரிமை” என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய கருத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த […]

உலகம் செய்தி விளையாட்டு

FIFA மாநாடு: இஸ்ரேலுடன் மேடையேற பாலஸ்தீனம் மறுப்பு!

  • May 1, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் நடைபெற்ற FIFA கால்பந்து மாநாட்டில், பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர் Jibril Rajoub இஸ்ரேலிய பிரதிநிதியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளார். இஸ்ரேலிய கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவருடன் இணைந்து நிற்குமாறு FIF தலைவர் வேண்டுகோள் விடுத்தபோதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்தார். இஸ்ரேலின் செயல்களை மறைக்க இவ்வாறான மேடையை பயன்படுத்தக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு மத்தியில் இஸ்ரேலியப் பிரதிநிதிகளுடன் கைகுலுக்க முடியாது என பாலஸ்தீன தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

  • May 1, 2026
  • 0 Comments

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) இரண்டு பிரதான பேரணிகளை நடத்தியுள்ளது. வடக்கு மாகாண பேரணி முல்லைத்தீவு, மாங்குளத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பேரணி, பட்டிப்பளையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன் , புதிய அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த காலப்பகுதியில் ஈரான், அமெரிக்கா செய்வது என்ன?

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்தை இரு நாடுகளும் தங்களின் இராணுவ உத்திகளை மறுபரிசீலனை செய்ய பயன்படுத்திவருகின்றன. ஏனெனில் அமைதி பேச்சு தோல்வியடைந்தால் எதிர்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட போர் நடவடிக்கைகளுக்கு இரு தரப்பும் தயாராக வேண்டியுள்ளது. அமெரிக்கா தனது ஏவுகணை வலிமையை அதிகரித்துள்ள போதிலும், நேரடித் தரைப்போருக்கு இன்னும் தயாரில்லை என தெரியவருகின்றது. மறுபுறத்தில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை தனது முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எனினும், சர்வதேசக் கூட்டமைப்பு உருவாகும் பட்சத்தில் ஹார்முஸ் நீரிணையை அந்நாடு திறக்கக்கூடும் […]

உலகம்

அமெரிக்காவின் தேசிய கடன் : 02ஆம் உலகப்போருக்கு பின் சாதனை அளவு உயர்வு!

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தேசியக் கடன் 31.27  டிரில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனின் பங்கு தற்போது 100.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தக் கடன் அளவு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு (1946-ல்)  பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 106 சதவீதம் என்ற இலக்கை நெருங்குகிறது. அதேநேரம் 2030 ஆம் ஆண்டுக்குள்  இந்தக் கடன், போருக்குப் பிந்தைய சாதனையை விஞ்சும் என்றும், ஒரு தசாப்தத்திற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதத்தை எட்டக்கூடும் என்றும் பொருளாதார […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் – M15 எச்சரிக்கை!

  • May 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள யூதர்களுக்கும் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து M15 எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி தீவிரவாதத்தால் தூண்டப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அதனுடன் அரசு சார்ந்த அச்சுறுத்தல்களும் நீடிப்பதாகவும் அந்தப்  அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய இராச்சியம் சில காலமாக பயங்கரவாத அச்சுறுத்தல்களில் படிப்படியான அதிகரிப்பை சந்தித்து வருவதாகக் கூறியுள்ளது. அதேநேரம் யூத-எதிர்ப்பைக் கையாள்வதற்கு ஐக்கிய இராச்சிய அரசாங்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சஜித் சவால்!

  • May 1, 2026
  • 0 Comments

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார். “ஐக்கிய மக்கள் சக்தி பலவீனமான எதிரணி எனக் கூறுவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆனால் பலம்பொருந்திய அரசாங்கத்தின் சபாநாயகரை வீட்டுக்கு அனுப்பினோம். எரிசக்தி அமைச்சரை வீட்டுக்கு அனுப்பினோம். எனவே, நாம் வலுவாகவே இருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியும் எம்முடன் இணையும். இந்த […]

இந்தியா செய்தி

சிலிண்டர் விலை அதிகரிப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் என காங்கிரஸ் எச்சரிக்கை

  • May 1, 2026
  • 0 Comments

வணிக சிலிண்டரைத் தொடர்ந்து அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பணவீக்கத்தின் தாக்கம் தேர்தல்களுக்குப் பின்னரே உணரப்படும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். அதன்படி இன்று, […]

ஐரோப்பா

இஸ்ரேலிய தூதரகத்திற்குள் கத்திகளுடன் நுழைய முயன்ற நபர் குற்றவாளியாக அறிவிப்பு!

  • May 1, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்குள் கத்திகளுடன் நுழைய முயன்ற நபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். குவைத்தில் பிறந்த 34 வயதான அப்துல்லா அல்பாத்ரி (Abdullah Albadri) காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இங்கிலாந்தில் புகலிடம் கோரிய அவர் மீது பயங்கரவாதச் செயல்களுக்குத் தயாரானது மற்றும் இரண்டு கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. காசாவில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப் ‘பழிவாங்கும்’ நோக்கத்தில் அவர் செயல்பட்டதாக நடுவர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினரின் விசாரணையில்  […]

உலகம் செய்தி

லெபனானில் புதிய இடப்பெயர்வு உத்தரவு: மக்களுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

  • May 1, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் புதிய இடம்பெயர்வு உத்தரவை வெளியிட்டுள்ளது. ஹபூச் நகரில் வசிக்கும் மக்களை உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு, திறந்த வெளிப் பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அத்ராயீ, சமூக வலைத்தளமான X இல் வெளியிட்ட அறிவிப்பில், “ஹிஸ்புல்லா தொடர்புடைய இடங்களுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது” என எச்சரித்துள்ளார். போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், […]