இலங்கை

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல் – ஒருவர் பலி

  • April 10, 2026
  • 0 Comments

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருந்து நிகழ்வின் போது, மாணவர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த மாணவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவேளை, இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் […]

இலங்கை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

  • April 10, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையின் இரு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில்: 10 பேர்கொண்ட குழு நியமனம்!

  • April 10, 2026
  • 0 Comments

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவது சந்திப்பில் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. இந்த விடயத்தை ஒட்டி கட்சிகள் எல்லாவற்றினாலும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பணிக்காக சட்டத்துறையினர் ஐவரையும், கட்சிகளின் ஐந்து பிரதிநிதிகளையும் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை: NPP அரசு திட்டவட்டம்!

  • April 10, 2026
  • 0 Comments

“பொருளாதார வீழ்ச்சி, இனவாதம் என்பவற்றை வைத்து ஆட்சியைக் கைப்பற்றலாம் என சிலர் நினைக்கின்றனர். அது பகல் கனவு மாத்திரமே. எமது ஆட்சியை குறுக்கு வழியில் கவிழக்க முடியாது.” – என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். சட்டத்தின் பிரகாரமே ஆட்சி நடத்தப்பட்டுவருகின்றது. மக்களுக்கான சட்டங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டில் வரிசை யுகம் ஏற்பட வேண்டுமெனக் கருதி ஒரு சில எதிரணி […]

உலகம் செய்தி

நட்பு நாடுகள் அமெரிக்காவிற்கு முழு ஆதரவு அளிக்கின்றன – நேட்டோ

  • April 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஈரானுடனான போர் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் விரைவாக ஆதரவு வழங்குவதாக நேட்டோ தலைவர் ரூட்டே, தனது உரையில், வலியுறுத்தியுள்ளார். ஆரம்ப கட்டத் தாக்குதல்களில் நட்பு நாடுகள் சில சற்று மெதுவாக செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களை முன்னறிவிப்பு இன்றி அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், தற்போது ஐரோப்பா முழுவதும் நாடுகள் மிகப்பெரிய அளவிலான ஆதரவை வழங்குகின்றன என்று ரூட்டே தெரிவித்தார். ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில் நாடுகளின் கூட்டணியை வழிநடத்தியதற்காக பிரித்தானியாவையும் அவர் பாராட்டினார். […]

உலகம் செய்தி

நீண்ட கால மௌனத்திற்கு பிறகு ஈரானுடன் ஜேர்மன் நேரடி பேச்சுவார்த்தை

  • April 9, 2026
  • 0 Comments

ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ், நீண்ட கால மௌனத்துக்குப் பிறகு, ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியதாக தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து நடைபெறும். ஈரான் மற்றும் அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டு, சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் முயற்சிகளில் ஜெர்மனி பங்களிக்கும் என்றும் ஜெர்மனி ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு முழு நாகரிகத்தையும் அழிக்க நினைக்கவில்லை என்றும் நம்புவதாகவும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் – லெபனான் தாக்குதல்கள் – முடிவில்லா போரும் பேரழிவு எச்சரிக்கையும்

  • April 9, 2026
  • 0 Comments

அண்மையில் இஸ்ரேல் லெபனான் மீது மேற்கொண்ட தாக்குதல்கள், பல காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு வருகிறன. நெதன்யாகு, ஆட்சி மாற்றம் போன்ற முக்கிய இலக்குகளை அடைவதில் தோல்வியடைந்ததால், ஈரானுடனான போரினைத் தொடர விரும்புகிறார் என சிலர் விமர்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதி, லெபனானைச் தாக்குவதன் மூலம் பலவீனமான ஒப்பந்தத்தை குலைக்க முயற்சிப்பதாக கருதப்படுகிறது. நெதன்யாகுவின் முக்கிய இலக்கு, ஹிஸ்புல்லாவிடமிருந்து வரும் அச்சுறுத்தலை அகற்றுவதாகும். குறிப்பாக, வடக்கு இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்களின் மூலம் சமூகங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைப்பதாகும். இதற்காக […]

உலகம்

ஈரான் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிக் கரம் நீட்டும் IMF!

  • April 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 50 பில்லியன் அமெரிக்க டொலர் (63.7 பில்லியன் சிங்கப்பூர் டாலர்) வரை உடனடி நிதியுதவி வழங்க வேண்டியிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர், வாஷிங்டனில் IMF மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தும் வருடாந்திர வசந்தகாலக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட  அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “மத்திய கிழக்கு […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம்: பாகிஸ்தானின் உதவியை கோருகிறது லெபனான்!

  • April 9, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது லெபனான்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif வன்மையாகக் கண்டித்துள்ளார். அதேபோல இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த பாகிஸ்தான் உதவ வேண்டும் என லெபனான் பிரதமர் Nawaf Salam கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கும் பொருந்தும் என மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஈரானும் […]

உலகம்

ட்ரம்பின் ஆட்சி – அமெரிக்காவை புறக்கணிக்கும் போப் லியோ!

  • April 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்குப் பதிலாக, போப் லியோ XIV ஜூலை 4 ஆம் திகதி லம்பேடுசாவில் (Lampedusa) உள்ள ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோரைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. போப் லியோ XIV அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருக்கும் வரை   அமெரிக்காவிற்குத் திரும்ப மாட்டார் என்று அறிக்கைகள் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய மோதல் மற்றும் இராஜதந்திரம் குறித்த போப்பின் கருத்துக்கள், ட்ரம்பின் கொள்கைகளுக்கு, குறிப்பாக “டான்ரோ கோட்பாட்டிற்கு” (Donroe […]

error: Content is protected !!