ஐரோப்பா செய்தி

போர் காரணமாக கோடை விடுமுறை பயணிகள் இடமாற்றம்

  • March 14, 2026
  • 0 Comments

  மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பயணிகள் கோடை விடுமுறைக்காக பாதுகாப்பான, எளிதில் சென்றடையக்கூடிய இடங்களைத் தெரிவு செய்வதாக ஐரோப்பாவின் மிகப்பெரிய விடுமுறை நிறுவனம் டுய் (TUI) தெரிவித்துள்ளது. முன்னதாக கிழக்கு மத்தியதரைக் கடலுக்குச் செல்ல திட்டமிட்ட பயணிகள், தற்போது சைப்ரஸ் (Cyprus), துருக்கி (Turkey), கிரீஸ் (Greece), இத்தாலி (Italy), ஸ்பெயின் (Spain) மங்ஞம் மால்டா (Malta) போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்வதாக கூறப்படுகிறது. டொமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா போன்ற கரீபியன் […]

ஐரோப்பா செய்தி

முன்னாள் தொழிலாளர் கட்சி எம்.பி. காலமானார்

  • March 14, 2026
  • 0 Comments

முன்னாள் தொழிற் கட்சி எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் பில் வூலாஸ் (Bill Woolas) தனது 66 வயதில் காலமாகியுள்ளார். அவர் பல ஆண்டுகளாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். பில் வூலாஸ் 1997 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை டோனி பிளேர் (Tony Blair) மற்றும் கோர்டன் பிரவுன் (Gordon Brown) அரசாங்கங்களில் ஓல்ட்ஹாம் ஈஸ்ட் (Oldham East)மற்றும் சாடில்வொர்த் (Saddleworth)தொகுதிகளுக்கான எம்.பி.யாக பணியாற்றியுள்ளார். உள்ளூர் அரசு, சுற்றுச்சூழல் […]

ஐரோப்பா செய்தி

வீதியில் குப்பை வீசும் சாரதிகள் வாகனம் செலுத்த தடை – பிரித்தானியாவில் கடுமையாகும் சட்டம்

  • March 14, 2026
  • 0 Comments

புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ், வாகனம் செலுத்தும் போது வீதியில் குப்பை வீசும் சாரதிகளின் உரிமத்தில் அபராதப் புள்ளிகள் வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குற்றச் செயலில் ஈடுபட்டால் வீதிகளில் வாகனம் செலுத்த தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கைகள் இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வேல்ஸ் (Wales) ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட உள்ளன. மேலும், குப்பைகளை வீதியில் வீசுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் 12 அல்லது […]

உலகம் செய்தி

பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லா கட்டளை மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

  • March 14, 2026
  • 0 Comments

பெய்ரூட் (Beirut) நகரில் உள்ள ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் கட்டளை மையங்கள் நேற்று இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 110 கட்டளை மையங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதல்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, சமீபத்திய நாட்களில் தெற்கு லெபனான் (Southern Lebanon) பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களால் […]

உலகம் செய்தி

அண்டை நாடுகளை தாக்காதீர்: ஈரானிடம் ஹமாஸ் அமைப்பு கோரிக்கை!

  • March 14, 2026
  • 0 Comments

அண்டை நாடுகள்மீதான தாக்குதலை ஈரான் கைவிட வேண்டும் என்று ஹமாஸ் Hamas அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தில் இருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுவானது, ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பாகவே கருதப்படுகின்றது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலை ஹமாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த மோதல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. […]

உலகம் செய்தி

ஈரான் பொருளாதாரத்தின் இதயம்மீது தாக்குதல்: அரச ஊடகம் கூறுவது என்ன?

  • March 14, 2026
  • 0 Comments

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் எண்ணெய் உள்கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு, ஈரானின் எண்ணை முனையமாக செயல்படுகிறது. அங்கு பெட்ரோலிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த தீவு கையாளுகிறது எனக் கூறப்படுகின்றது. ஈரானுக்கு முக்கியம் வாய்ந்த மேற்படி தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்குள்ள ராணுவ உள் கட்டமைப்புகள், கடற்படை […]

இலங்கை செய்தி

“வடக்கு உற்பத்திகளை புலம்பெயர் தமிழர்களுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு”

  • March 14, 2026
  • 0 Comments

உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகப் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்” மற்றும் முல்லைத்தீவு உற்பத்திகளின் விற்பனை நிலையமான ‘மேட் இன் முல்லைத்தீவு’ (Made in Mullaitivu) ஆகிய இரு […]

பொழுதுபோக்கு

‘விஜய்’ பெயரை கேட்டதுமே மின்னல் வேகத்தில் மறைந்த திரிஷா!

  • March 14, 2026
  • 0 Comments

தமிழக அரசியல் களம் மற்றும் திரையுலகில் விஜய், திரிஷா பற்றிய கதைகள் இன்னும் ஓயவில்லை. அது ஏதோவொரு வடிவில் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவியுள்ளார் நடிகை திரிஷா. தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவர் விஜயுடன் தான் சேர்ந்துவாழ விரும்பவில்லை. எனவே தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என அவர் கோரி […]

இந்தியா செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு நேசக்கரம்: ஈரான் உறுதி!

  • March 14, 2026
  • 0 Comments

“நெருக்கடியான நேரத்தில் இந்தியா உதவி செய்து வருகிறது. எனவே ஈரானும் நிச்சயம் உதவி செய்யும்.” என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி Mohammad Badali தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார். “ஈரான் மற்றும் இந்தியாவுக்கிடையில் மிக நீண்ட காலமாக நட்புறவு நீடிக்கிறது. எங்களது […]