இலங்கை

காத்தான்குடியில் கரையொதுங்கிய மர்ம பொருள்!

  • March 14, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மர்மப் பொருள் நேற்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் , கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

எரிசக்தி கட்டமைப்பு சாம்பலாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!

  • March 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் சாம்பலாக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையிலேயே ஈரான் இராணுவம் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை அமெரிக்கா அதிகரித்து வருகின்றது. கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படைகளை அனுப்பி வருகின்றது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் மஹிந்த செய்ததை அநுரவால் ஏன் செய்ய முடியவில்லை?

  • March 14, 2026
  • 0 Comments

“போரை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்சவால் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியுமென்றால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அநுரகுமார திஸாநாயக்கவால் அதனை ஏன் நடத்த முடியாதுள்ளது.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் TPA, நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் Mano Ganesan கேள்வி எழுப்பினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா தொடுத்தார். “மஹிந்த ராஜபக்சவே போரை முன்னெடுத்தார். இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடும் […]

இலங்கை செய்தி

தொலைபேசி அழைப்பை நிராகரிக்கும் அநுர: கடும் கவலையில் மனோ!

  • March 14, 2026
  • 0 Comments

ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அநுரகுமார திஸாநாயக்க பதிலளிப்பதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் TPA தலைவர் மனோ கணேசன் Mano Ganesan கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் மனோ கணேசன் Mano Ganesan கூறியவை வருமாறு, “மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்குரிய யோசனைக்கு நாம் ஆதரவளித்தோம். எதிரணியில் இருக்கும்போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அதற்கு ஆதரவளித்தார். […]

உலகம் செய்தி

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஏவுகணைத் தாக்குதல்!

  • March 14, 2026
  • 0 Comments

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் Baghdad அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் இருக்கும் ஹெலிபேட் தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தூதரகம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களால் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய தூதரகங்களில் ஒன்றான இந்த வளாகம், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. அமெரிக்க […]

செய்தி

கார்க் தீவில் அமெரிக்கா குண்டுவீச்சு

  • March 14, 2026
  • 0 Comments

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கார்க் தீவு அந்நாட்டின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகக் கருதப்படுவதுடன், இது ஈரானின் ‘பெட்ரோலிய உயிர்நாடி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கொள்வனவாளரான சீனா, இந்தத் தீவிலிருந்தே எண்ணெயைப் பெற்றுக்கொள்கிறது. மேலும், கார்க் தீவு மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ஈரானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என […]

அரசியல் இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்பு குறித்து பதறுகிறார் விமல்: சஜித்மீதும் பாய்ச்சல்!

  • March 14, 2026
  • 0 Comments

“தேசிய நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டு தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயல்படுகின்றது.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் பழிவாங்கலுக்காக புலனாய்வு பிரிவினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.இது முற்றிலும் தவறானது எனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தேசிய மட்டத்தில் ஏற்படும் தாக்கங்களை, சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் […]

விளையாட்டு

வெற்றி மகுடத்தை நிர்ணயிக்கும் பரபரப்பான ஆட்டம் நாளை!

  • March 14, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் Pakistan மற்றும் பங்களாதேஷ் Bangladesh அணிகளுக்கிடையிலான 3 ஆவதும், கடைசியுமான ஒருநாள் போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பகல் 1.45 மணியளவில் Mirpur, மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வென்றுள்ளதால் தொடரை நிர்ணயிக்கும் முக்கிய ஆட்டம் இதுவென்பதால் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

உலகம் செய்தி

ஈரானில் இடைக்கால அரசை வழிநடத்த களமிறங்கும் முக்கிய புள்ளி?

  • March 14, 2026
  • 0 Comments

இஸ்லாமிய புரட்சியையடுத்து 1979 இல் ஆட்சியை இழந்த ஈரானிய மன்னரின் மகனான ரெசா பஹ்லவி Reza Pahlavi , பாரிஸில் Paris உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை Volodymyr Zelensky சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஈரானில் அமையவிருக்கும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தத் தான் தகுதியானவர் என்று பஹ்லவி , உக்ரைன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார் என தெரியவருகின்றது. அத்துடன், ரஷ்யாவுடன் ஈரான் கொண்டுள்ள இராணுவக் கூட்டணி மற்றும் உக்ரைன் போரில் ஈரானிய ட்ரோன்களின் பயன்பாடு ஆகியவை தொடர்பில் […]

உலகம் செய்தி

ட்ரம்பின் முடிவுக்கு எதிராக ஐரோப்பிய தலைவர்கள் போர்க்கொடி!

  • March 14, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்தும் அமெரிக்காவின் முடிவை ஐரோப்பிய தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். உக்ரைன் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர இந்தச் சலுகை ரஷ்யாவிற்கு பெரும் நிதி உதவியாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தீர்மானம் ஐரோப்பாவின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, உக்ரைனில் அமைதி ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இத்தகைய தளர்வுகளை எதிர்த்துத் தமது கண்டனங்களைப் […]