உலகம் செய்தி

ஈரான் பொருளாதாரத்தின் இதயம்மீது தாக்குதல்: அரச ஊடகம் கூறுவது என்ன?

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் எண்ணெய் உள்கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு, ஈரானின் எண்ணை முனையமாக செயல்படுகிறது. அங்கு பெட்ரோலிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த தீவு கையாளுகிறது எனக் கூறப்படுகின்றது.

ஈரானுக்கு முக்கியம் வாய்ந்த மேற்படி தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்குள்ள ராணுவ உள் கட்டமைப்புகள், கடற்படை தளம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை அழிந்துள்ளதாக அமெரிக்க தரப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே தீவில் உள்ள எண்ணெய் உற்பத்தி உள்கட்டமைப்புகள் சேதமடையவில்லை என ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சுமார் 15-க்கும் மேற்பட்ட வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், பொருளாதார ரீதியான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி