இலங்கை செய்தி

எரிசக்தி அமைச்சரின் ‘தலை’ குறிவைப்பு: 18 ஆம் திகதி பிரேரணை கையளிப்பு!

  • March 16, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு Kumara Jayakody எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி, 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையிலேயே எம்.பிக்களிடம் நாளை கையொப்பம் பெறப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தரமற்ற நிலக்கரி இறக்குமதி […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையால் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு தலையிடி: போர்க்கப்பல் அனுப்ப சில நாடுகள் மறுப்பு!

  • March 16, 2026
  • 0 Comments

ஹார்முஸ் Hormuz நீரிணைக்கு தமது நாடு போர்க்கப்பல்களை அனுப்பாது என்று ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து அமைச்சர் Catherine King திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் தமது எதிரி நாடுகளின் கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்தப் பாதையைப் பாதுகாப்பளிக்க போர்க்கப்பல்களை அனுப்பி உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையிலேயே ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து அமைச்சர் […]

இலங்கை செய்தி

நாளை கடுமையான வெப்பம் நிலவும்

  • March 15, 2026
  • 0 Comments

நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை  விடுத்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் நாளை (16) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் அதிக நீரை அருந்துவது, வயல் வௌிகள் […]

உலகம் செய்தி

ஈரானில் தாக்குதல்களை தீவரப்படுத்தும் இஸ்ரேல்

  • March 15, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்  ஈரான் (Iran) மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் மத்திய ஈரானில் உள்ள  பகுதிகளை உள்ளடக்கும் வகையில், ஈரானிய ஆட்சியின் முக்கிய உட்கட்டமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகள், ஈரானிய ஆட்சியின் “கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திறன்களை” பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவிக்கப்பட்டுள்ளது‌. ஈரானிய ஆட்சியின் முக்கிய செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் அடித்தளங்களுக்கு ஏற்படும் சேதத்தை […]

இலங்கை செய்தி

உரத்திற்கும் QR குறியீடு?

  • March 15, 2026
  • 0 Comments

எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படும் அச்சம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். கேகாலை தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் நிலவும் நிலையில் அரசாங்கம் தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்துள்ளது. நேற்றைய தினம்கூட உற்பத்தி செய்யப்பட வேண்டிய மின்சாரம் […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு – போர்க்கப்பல்கள் அனுப்புமா பிரித்தானியா?

  • March 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் முக்கிய எண்ணெய் கப்பல் பாதைகளை பாதுகாக்க, பிரித்தானியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலித்து வருவதாக எரிசக்தி செயலாளர் Ed Miliband (எட் மிலிபாண்ட்) தெரிவித்துள்ளார். இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump)சனிக்கிழமை வெளியிட்ட எச்சரிக்கைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீரிணை மூடப்பட்டால் அதைத் திறப்போம் என்று ட்ரம்ப் தெரிவித்ததுடன், பிரித்தானியா, சீனா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் அந்த […]

இலங்கை செய்தி

பொலிஸாரின் உதவியுடனே இனி எரிபொருள் விநியோகம்

  • March 15, 2026
  • 0 Comments

இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் டி.ஜே. ராஜகருண இன்று (15) பிற்பகல் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “எமது எரிபொருள் முன்பதிவுகளள் (Orders) வழமை போன்று கிடைத்து வருகின்றன. எனவே, அடுத்த மாதம் இறுதி வரை எரிபொருள் விநியோகத்தில் […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்க இராணுவ விமானங்கள் சுவிட்சர்லாந்து வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மட்டுப்படுத்த தீர்மானம்

  • March 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க இராணுவ விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மட்டுப்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் ‘நடுநிலை’ கொள்கையின்படி, போரில் ஈடுபடும் எந்தவொரு தரப்பும் இராணுவ நோக்கங்களுக்காகத் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது என பெடரல் கவுன்சில் (Federal Council)திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து விமானப் பயணக் கோரிக்கைகளில், இராணுவ நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்புவதில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை தேவை

  • March 15, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காகப் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்பதற்கு முன்பு, பிரித்தானியா சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு செயலாளர் சர் மால்கம் ரிஃப்கைண்ட் (Sir Malcolm Rifkind) எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த கோரிக்கை குறித்து ‘ட்ரெவர் பிலிப்ஸ்’ (Trevor Phillips) நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் தலைவர் ஆஷ்டன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் மார்க் அர்பன் […]

உலகம் செய்தி

பதற்றத்திற்கு மத்தியிலும் ஹர்முஸ் நீரிணையைக் கடந்த இந்தியக் கப்பல்கள்

  • March 15, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியிலும், எரிவாயு ஏற்றிய இரண்டு இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக ஹர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில், ‘ஷிவாலிக்’ (Shivalik) மற்றும் ‘நந்தா தேவி’ (Nanda Devi) ஆகிய இரண்டு இந்தியக் கப்பல்களும் அந்தப் பகுதியைக் கடந்து […]