உலகம் செய்தி

ஈரான் பதிலடி: கத்தாரின் எரிவாயு சுத்திகரிப்பு நிலையம்மீது தாக்குதல்!

  • March 19, 2026
  • 0 Comments

ஈரானின் எரிவாயு தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, கத்தார் நாட்டின் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இந்தத் திட்டத்தில் அமெரிக்காவிற்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். கத்தார் நாட்டின் மீது எந்தத் தவறும் இல்லாதபோது ஈரான் அங்குத் தாக்குதல் நடத்தியது நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனிவரும் காலங்களில் ஈரான் கத்தாரைத் தாக்கினால், அமெரிக்கா ஈரானின் எரிவாயு […]

உலகம் செய்தி

ஈரானுடனான போரால் அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் உச்சம்!

  • March 19, 2026
  • 0 Comments

ஈரானுடனான போருக்கு மத்தியில் பாதுகாப்புச் செலவினங்களை சுமார் 1.5 டிரில்லியன் (£151bn) டாலராக உயர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. ஒரு வலிமையான ராணுவத்தை உருவாக்கி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே அவர் இந்த ஒதுக்கீட்டை கோரவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஈரான்மீதான போர் ஆரம்பமான முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்கா போருக்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளது. எனினும், இது தொடர்பான துல்லியமான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ட்ரம்பின் மேற்படி கோரிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் […]

உலகம் செய்தி

அமெரிக்கா பறக்கிறார் ஜப்பான் பிரதமர்!

  • March 19, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த கோரிக்கையை ஜப்பான் பிரதமர் நிராகரித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் Sanae Takaichi இன்று (19) அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இவ்விஜயத்தின்போது அவர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது ஹார்முஸ் விவகாரம் பற்றியும் கருத்தாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஆழ்கடல் கனிம வள மேம்பாடு போன்ற திட்டங்கள் மூலம் […]

உலகம் செய்தி விளையாட்டு

தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனைகளுக்கு அமோக வரவேற்பு!

  • March 19, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் முடிவைக் கைவிட்ட ஈரான் தேசிய மகளிர் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. எனினும், அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சம் இன்னும் நிலவுகிறது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அணியின் இருவர் மட்டும் ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிட முடிவெடுத்துள்ள நிலையில், மற்றவர்கள் கடுமையான அரசு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடு திரும்பியுள்ளனர். தமது நாட்டு வீராங்கனைகளை ஆஸ்திரேலியா பிணைக் கைதிகளாக வைத்துள்ளது என […]

உலகம் செய்தி

ஈரானில் மிகப்பெரிய எரிவாயு வயல்மீது தாக்குதல்!

  • March 19, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 20 ஆவது நாளாக தொடரும் நிலையில், இரு தரப்புகளுமே தீவிர தாக்குதல்களை தொடுத்துவருகின்றன. இந்நிலையில் ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் அமைந்துள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வருகின்றனர். ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகள் தாக்கப்படுவது இதுவே […]

ஐரோப்பா செய்தி

எரிசக்தி கொள்கையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளுமாறு நைஜல் வலியுறுத்தல்

  • March 18, 2026
  • 0 Comments

நாட்டின் எரிசக்தி கொள்கையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சீர்திருத்த UK கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) பிரதமரை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேட்கும் கேள்வி நேரத்தின் போதே அவர் இதனை வலியுறுத்தினார். வடகடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான புதிய உரிமங்களைத் திறக்கவும், ஆய்வு நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைக்கவும் பிரதமர் தலையிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) தெரிவித்தார். மேலும் வரி வருவாயை அதிகரிக்குமாறும் விலைகளைக் குறைக்குமாறும் சீர்திருத்த […]

ஐரோப்பா செய்தி

கென்ட் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தடுப்பூசி

  • March 18, 2026
  • 0 Comments

கென்ட் பகுதியில் மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி வழங்கும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கென்ட் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுமார் 5,000 மாணவர்களுக்கு மூளைக்காய்ச்சல் பி (Meningitis B) தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. மேலும், கென்ட் முழுவதும் உள்ள வளாகங்களில் ஏற்கனவே 2,500 டோஸ் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

“வடக்கிலுள்ள பாடசாலைகளில் மத நூல்களை விநியோகிக்க தடை”

  • March 18, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய […]

ஐரோப்பா செய்தி

புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாக குடியேறுவதைக் கடினமாக்கும் அரசாங்கத் திட்டங்கள் நம்பிக்கைத் துரோகமானது

  • March 18, 2026
  • 0 Comments

புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாக குடியேறுவதைக் கடினமாக்கும் அரசாங்கத் திட்டங்கள் நம்பிக்கைத் துரோகமானவையென நாடாளுமன்ற உறுப்பினர் ஏஞ்சலா ரெய்னர் (Angela Rayner) கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்களின் நிரந்தர வசிப்பிடத்திற்குத் தகுதி பெறும் காலத்தை 05 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தவும், அகதிகளுக்கு 20 ஆண்டுகளாக நீடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாற்றங்கள், மக்கள் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இதேவேளை, உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) […]

உலகம் செய்தி

ஈரானின் பெட்ரோ இரசாயன வளாகம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது

  • March 18, 2026
  • 0 Comments

தெற்கு பார்ஸில் (South Pars, Iran) உள்ள ஈரானின் பெட்ரோ இரசாயன வளாகம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC – Islamic Revolutionary Guard Corps) இணைந்த செய்தி நிறுவனமான தஸ்னிம் (Tasnim) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இந்த வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு பார்ஸ் (Pars) உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கொண்ட பகுதியாகும், இதில் கட்டார் மற்றும் […]