பொழுதுபோக்கு

சரிகமபவில் ஈழத்து வர்ஜாவுக்கு நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

  • March 24, 2026
  • 0 Comments

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் கடந்த வாரம், ஈழத்து குயில் வர்ஜாவுக்கு நடுவர் ஸ்ரீனிவாஸ் frame ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் Dedication சுற்று நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக Dedication சுற்றில் பாடல் பாடியிருந்தனர். அந்த வகையில் வர்ஜா தனது சகோதரிகளுக்காக பாடல் பாடினார். அவர் பாடுவதற்கு முன்பு, “தங்கைகளுக்கு தான் இன்னொரு அம்மா. அவர்களை காணாமல் இருப்பது கவலையாக இருக்கின்றது. நான் இறுதி மேடைக்கு வந்த பிறகு […]

இலங்கை செய்தி

இந்தியாவில் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழில்!

  • March 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு இன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இவ்வாறு பயிரிடப்பட்டு நேற்றையதினம் அறுவடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றையதினம் வயலில் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி உழப்பட்டு சிறுதானிய பயிரான […]

இலங்கை செய்தி

‘மத்திய கிழக்கு போர்’ – இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம்!

  • March 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 89 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மார்ச் 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 35 ஆயிரத்து 330 பேரும், பிரிட்டனில் இருந்து 12 ஆயிரத்து 599 பேரும், ரஷ்யாவில் இருந்து 11 ஆயிரத்து 927 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். […]

இலங்கை செய்தி

ஈரானுக்காக தங்கம் வழங்கிய காஷ்மீர் மக்கள்!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, காஷ்மீர் மக்கள் தம்மால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர். பணம் முதல் தங்கம் வரை தாராளமாக நன்கொடைகளை அவர்கள் வழங்கி உள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மக்களுக்கு ஆதரவாக, காஷ்மீரின் பட்காம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்கத் தொடங்கியுள்ளனர். ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, ஷியா பிரிவு மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு […]

உலகம் செய்தி

போரின் கோர முகம்: ஈரானில் 208 குழந்தைகள் பலி!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 208 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. ஈரானின் அவசரக்கால சேவைத் துறை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. போர் தொடங்கியவேளை மினாப் நகரில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 168 சிறுமிகள் பலியாகியுள்ளனர். போரால் ஈரானில் 1,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்!

  • March 24, 2026
  • 0 Comments

சுயநலவாதிகளின் சதிக்கு இடம் கொடுக்காது நீதியை தரவேண்டும் – யாழில் ஆசிரியர்கள் போராட்டம்! வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை இன்று (24) முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில். – “8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்களை […]

இலங்கை செய்தி

காணி விடுவிப்பு குறித்து யாழ்.கட்டளைத் தளபதியுடன் ஆளுநர் ஆராய்வு!

  • March 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை (23.03.2026) மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது என ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்காகக் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர், தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய […]

உலகம்

கொலம்பியாவில் பரபரப்பு: இராணுவ வீரர்களுடன் பறந்த விமானம் விபத்து

  • March 24, 2026
  • 0 Comments

கொலம்பிய வான்படைக்குச் சொந்தமான C-130 Hercules ரக போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொலம்பிய இராணுவ வீரர்கள் மற்றும் வான்படை ஊழியர்களை ஏற்றிச் சென்ற இந்த விமானம், பெரு (Peru) எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகளின் போது இதுவரை 66 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 114 பயணிகளும் 11 பணியாளர்களும் இருந்ததாக கொலம்பியா வான்படைத் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: ஈரானிடம் தென்கொரியா விடத்துள்ள கோரிக்கை!

  • March 24, 2026
  • 0 Comments

தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்குப் போரால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தென்கொரியா வெளிவிவகார அமைச்சர் சோ ஹியுன் Cho Hyun வெளியிட்டார். அத்துடன், பதற்றத்தைத் தணிக்குமாறு ஈரானுக்கு அழைப்பு விடுத்தார். குறிப்பாக ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யுமாறு அவர் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi, இடம் கோரிக்கை விடுத்தார். அங்கு சிக்கியுள்ள தென் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: ஏப்ரல் 9 சபையில் விவாதம்!

  • March 24, 2026
  • 0 Comments

நாடாளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. நாடாளுமன்றம் கூடும் இத்தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி […]

error: Content is protected !!