உலகம் செய்தி

ட்ரம்புக்கு எதிராக பாரிய போராட்டம்!

  • March 29, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக பெருமளவிலான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. தன்னிச்சையான இராணுவ நடவடிக்கைகள், கடுமையான குடிவரவு சட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் போன்ற காரணங்களால் இந்த எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. நாடாளுமன்ற அனுமதியின்றி எடுக்கப்படும் முடிவுகள் நாட்டின் ஜனநாயக மாண்புகளை சிதைப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, ஈரானுடனான போர் பதற்றமும் எரிபொருள் விலை உயர்வும் பொதுமக்களிடையே மிகுந்த […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் நெருக்கடி: ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்து இலவசம்!

  • March 29, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று வழிகள் கையாளப்பட்டுவருகின்றது. குறிப்பாக பெட்ரோல் விலை 85 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் விக்டோரியா Victoria மாநில அரசு, ஏப்ரல் மாதம் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் மக்கள் எரிபொருள் நுகர்வைக் குறைத்து, பேருந்து மற்றும் ரயில்களை அதிகமாகப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே […]

விளையாட்டு

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது RCB!

  • March 29, 2026
  • 0 Comments

IPL T-20 தொடரில் நேற்று (29) நடைபெற்ற முதலாவது போட்டியில் Royal Challengers Bengaluru அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த RBC அணி. இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய Sunrisers Hyderabad ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அணியின் தலைவர் இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசி அணியை மீட்டார். அவருக்குத் துணையாக அனிகேத் வர்மா 18 பந்துகளில் […]

உலகம்

“இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம்”

  • March 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பிராந்தியத்திலுள்ள அத்தகைய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த இடங்களை […]

உலகம் செய்தி

31 ஆவது நாளாக தொடரும் போர்: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

  • March 29, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். “ வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எமது எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று அவர் திட்டவட்டமாக Masoud Pezeshkian வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது எக்ஸ்தள பக்கத்தில் அவர் விசேட பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தாது என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்களை குறிவைத்தால், அதற்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்.” எனவும் அவர் […]

இலங்கை

கொழும்பில் 5 மணிநேர நீர்வெட்டு!

  • March 29, 2026
  • 0 Comments

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதன் காரணமாக, இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (5 மணித்தியாலங்கள்) இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தெஹிவளை – கல்கிசை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் (களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை மொரட்டுவ – ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு […]

உலகம் செய்தி

தரைவழி தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்குவாரா ட்ரம்ப்?

  • March 29, 2026
  • 0 Comments

ஈரானில் பல வாரங்களுக்குத் திட்டமிடப்பட்ட தரைவழி இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் ஆயத்தமாகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முறையான ஒப்புதல் அளித்துள்ளாரா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது ஒரு முழுமையான போர் நடவடிக்கையாக இருக்காது என்றும், மாறாக சிறப்புப் படைகள் மற்றும் தரைப்படை வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் திடீர் தாக்குதல்களாக மட்டுமே இருக்கும் […]

இலங்கை

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

  • March 28, 2026
  • 0 Comments

ரஷ்ய கூட்டமைப்பின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென்கோ (Andrey Rudenko) உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி அவர் நாட்டை வந்தடைவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய பிரதி அமைச்சர், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 11 ஆவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

நெத்திலி விலை இருமடங்கு உயர்வு

  • March 28, 2026
  • 0 Comments

ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமான நெத்திலி கருவாட்டின் விலை உயர்ந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார். போருக்கு முன்னர் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்திலி, தற்போது 1500 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். உற்பத்திச் செலவு மற்றும் விநியோகச் சிக்கல்களே இந்த விலை உயர்விற்குக் காரணம் என கணேஷ் விநாயகசுந்தரம் சுட்டிக்காட்டினார்.

error: Content is protected !!