உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் தெற்கு லெபனானில் மூன்று ஊடகவியலாளர்கள் பலி!

  • March 28, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரை ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாட்டாளர் என இஸ்ரேலிய ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இச்சம்பவம் சர்வதேச சட்ட மீறல் என்று லெபனான் ஜனாதிபதி கடுமையாகச் சாடியுள்ளார். போர் சூழலில் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவது குறித்து லெபனான் மக்கள் பெரும் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். ஏற்கனவே பல நூறு குடிமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலியாகியுள்ள நிலையில், இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகத்துறையினரைத் தாக்குவதாக குற்றச்சாட்டுகள் […]

உலகம் செய்தி

அமெரிக்க , பிரிட்டிஷ் தளங்கள் மூலம் ரஷ்யா ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருகிறது -செலென்ஸ்கி குற்றச்சாட்டு

  • March 28, 2026
  • 0 Comments

வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இராணுவத் தளங்கள், மேலும் சாகோஸ் தீவுகளில் உள்ள Diego Garcia தளத்தை குறிவைத்து நடந்த தாக்குதல்களுக்கு ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்ததாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தொலைபேசியில் இருந்த உளவுத்துறை அறிக்கையை வாசித்து காட்டினார். அந்த அறிக்கையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், டியாகோ கார்சியா தளம் மற்றும் வளைகுடா முழுவதும் உள்ள எண்ணெய் கிணறுகள் […]

உலகம் செய்தி

கட்டார் – உக்ரைன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

  • March 28, 2026
  • 0 Comments

கட்டார் மற்றும் உக்ரைன், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியின் வளைகுடா பயணத்தின் போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போதான சமீபத்திய ஒப்பந்தம் இதுவாகும். இரு நாடுகளும் பிராந்திய பாதுகாப்பு முன்னேற்றங்கள் மற்றும் ஒத்துழைக்கக்கூடிய துறைகள் குறித்து விவாதித்துள்ளனர். உக்ரைனின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி ஹ்னாடோவ் மற்றும் கட்டாரின் தலைமைத் தளபதி ஜாசிம் பின் முகமது அல்-மன்னாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் தொழில்நுட்பம் மற்றும் […]

இந்தியா

ட்ரம்ப், மோடி உரையாடலில் எலன் மஸ்க் பங்கேற்றாரா?

  • March 28, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump மற்றும் இந்திய பிரதமர் மோடி Modi ஆகியோருக்கிடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்கும் Elon Musk கலந்துகொண்டிந்தார் என வெளியான தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மேற்படி தகவலை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், “ மார்ச் 24 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் […]

இலங்கை செய்தி

அனைத்து பிள்ளைகளுக்கும் நவீன தொழில்நுட்பக் கல்வி – பிரதமர் அளித்த உறுதி

  • March 28, 2026
  • 0 Comments

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு புர்ஹானி செரண்டிப் கல்லூரியில் இன்று (28) நடைபெற்ற, இலங்கை இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் உலக ரோபோ ஒலிம்பியாட் (WRO) தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இம்முறை போட்டிகளில் நாடு முழுவதிலும் உள்ள […]

உலகம் செய்தி

துபாயில் உக்ரைனினில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை தாக்கியது ஈரான்!

  • March 28, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள உக்ரைனுக்குச் சொந்தமான தற்காலிய ஆயத கிடங்கு ஈரான் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. ஈரானின் உயர்மட்ட ராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்திற்கு உதவும் நோக்கில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை சேமித்து வைத்திருந்த இடத்தையே ஈரான் குறிவைத்துள்ளது என தகவல் வெளியாகிள்ளது. இந்தத் தாக்குதலின் போது அங்கு பணியில் இருந்த 21 உக்ரைனியர்களின் […]

உலகம் செய்தி

ஈரான்–துருக்கி தொடர்பு – போர் சமாதான முயற்சிகள் தீவிரம்

  • March 28, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரைத் தீர்ப்பதில் துருக்கி “ஆக்கப்பூர்வமான பங்கை” வகிக்க தயாராக உள்ளதென அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான தொலைபேசி உரையாடலில் , போரை முடிவுக்குக் கொண்டுவர துருக்கி மேற்கொண்ட முயற்சிகளை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாராட்டியதாக கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு செல்லும் இராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றும் நாடுகளில் துருக்கியும் ஒன்றாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய பயோமெட்ரிக் எல்லைச் சோதனை மீண்டும் தாமதம்

  • March 28, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பயோமெட்ரிக் எல்லைச் சோதனை முறைமை, அறிமுகம் மீண்டும் தாமதமாகியுள்ளது. டோவர் துறைமுகம் மற்றும் யூரோடன்னல் (Dover and Eurotunnel) வழியாக பயணம் செய்யும் பிரித்தானிய பயணிகளிடம், புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படவிருந்தது. ஆனால், “நுழைவு அமைப்பு” எனப்படும் EES முறையில் தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்ந்துவருவதால், இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி கிடைத்த பின்னர், முழுமையான பயோமெட்ரிக் சோதனைகள் அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பை […]

உலகம் செய்தி

உக்ரைன் ஜனாதிபதி வளைகுடா நாடுகளுக்கு அவசர விஜயம்!

  • March 28, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிதி Volodomyr Zelensky கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவுடனான போரில் தமது நாடு பெற்ற ட்ரோன் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ளும் வகையிலேயே அவர் பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது. இதற்குப் பிரதிபலனாக, உக்ரைனின் வான் பாதுகாப்புக்குத் தேவையான நிதி மற்றும் ஆயுத உதவிகளை செல்வந்த நாடுகளிடமிருந்து திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கு போரின் பக்கம் திரும்பியுள்ளதால், உக்ரைன் தனது பாதுகாப்பை உறுதி செய்ய புதிய […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் மார்பகப் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு -சுகாதார அமைப்பில் சீர்கேடு

  • March 28, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மருத்துவமனை அறக்கட்டளையொன்றில் ஏற்பட்ட கடுமையான சேவை குறைபாடுகளால், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கவுண்டி டர்ஹாம் மற்றும் டார்லிங்டன் அறக்கட்டளை, 2023 ஆம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்ற நோயாளர்களின் மருத்துவப் பதிவுகளை மறுபரிசீலனை செய்து வருகிறது. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 357 பேரில், 245 நோயாளர்கள் சிகிச்சை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டுக்கு முன்பு சிகிச்சை பெற்றவர்களையும் மீண்டும் ஆய்வு செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!