ரணிலுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அவசியம் – 5 சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் 5 சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து நேற்று மதியம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அவரது உடல்நிலை திருப்திகரமாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார். இதுபோன்ற பின்னணியில், அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி […]













