ஆசியா

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலியானவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டது!

  • September 2, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1100ஐ தாண்டியுள்ளது, 3500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 31 ஆம் திகதி இரவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) கூறுகையில், அதிகாலை 12:47 மணிக்கு (IST) பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 160 கி.மீ ஆழத்தில் மையமாக இருந்ததாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் அபோட்டாபாத் வரை பலத்த நிலநடுக்கங்கள் […]

பொழுதுபோக்கு

ஒரு காலத்தில் சீரியல் நடிகை… இப்போ டாப் ஹீரோயின்

  • September 2, 2025
  • 0 Comments

ஒரு காலத்தில் சீரியல்கள் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த இவர், மெதுவாக படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவராகி இருக்கிறார். ​​அவர் யார் தெரியுமா? அவர்தான் மிருணாள் தாகூர். ”குங்குமம் பாக்யா” சீரியல் மூலம் பிரபலமான மிருணாள் தாகூருக்கு, மெதுவாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த மிருணாள் தாகூர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ”விட்டி தண்டு” என்ற மராத்தி படத்தின் மூலம் […]

இலங்கை

இத்தாலியின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நாளை இலங்கை வருகை

  • September 2, 2025
  • 0 Comments

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் மரியா திரிபோடி, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். நாளை முதல் 5 ஆம் தேதி வரை அவர் இந்த விஜயத்தில் ஈடுபடுவார் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் இலங்கைக்கு இத்தாலிய இராஜதந்திரி ஒருவர் மேற்கொள்ளும் மிக உயர்ந்த மட்ட விஜயம் இதுவாகும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் […]

இலங்கை

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

  • September 2, 2025
  • 0 Comments

இன்று மீண்டும் 2000 ரூபாயால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்று 280,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றிற்கு 2000 ரூபாயால் அதிகரித்து, […]

உலகம்

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் – புட்டினிடம் மோடி வலியுறுத்தல்

  • September 2, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புடினை வலியுறுத்தினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டுக்கு இடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகள், உக்ரைன் போர் உட்பட உலகளாவிய […]

உலகம்

வட கொரியாவிற்கு ஒளிபரப்பாகும் இராணுவ வானொலி நிலையத்தை நிறுத்திய தென் கொரியா

  • September 2, 2025
  • 0 Comments

வட கொரியாவிற்கு ஒளிபரப்பாகும் தனது இராணுவ வானொலி நிலையத்தை நிறுத்த தென் கொரியா நடவடிக்கை எடுத்துள்ளது. தென் கொரியா 15 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ‘சுதந்திரத்தின் குரல்’ வானொலி நிலையத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. வட கொரியாவுடனான இராணுவ பதட்டங்களைக் குறைத்து நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் தென் கொரியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு வட கொரியா தென் கொரிய போர்க்கப்பலை மூழ்கடித்த பிறகு இந்த வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. சுதந்திரத்தின் குரல் இராணுவ […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்ச பேரழிவு – டிரம்ப் ஆவேசம்

  • September 2, 2025
  • 0 Comments

இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளதால், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் பதற்றமான நிலைக்கு சென்றுள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்தியா தொடர்பாக ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “இந்தியா தனது வரிகளை குறைக்க முன்வந்துள்ளது. ஆனால் இது மிகவும் தாமதமாகும். ஏனெனில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை அதிகமாக வாங்குகிறது, ஆனால் அமெரிக்காவிலிருந்து மிகவும் குறைவாகவே வாங்குகிறது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் லென்ஸ் ஆப் நிறுத்தம்

  • September 2, 2025
  • 0 Comments

மைக்ரோசாஃப்ட் லென்ஸ் பயனுள்ள செயலியாக இருந்தாலும், அதற்கு மாற்றாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல சிறந்த PDF ஸ்கேனர் ஆஃப்கள் உள்ளன. டிஜிட்டல் முறையில் ஆவணங்களில் கையெழுத்திடுவது, புத்தக பக்கங்களை ஸ்கேன் செய்வது (அ) ரசீதுகளைப் பாதுகாப்பது போன்ற வேலைகளுக்கு உதவும் 5 சிறந்த PDF ஸ்கேனர் ஆஃப்கள் பற்றி பார்ப்போம். 1. OneDrive மைக்ரோசாஃப்ட் லென்ஸ் ஆஃப்-க்கு ஒரு சிறந்த மாற்று OneDrive. இதில் லென்ஸ் ஆஃப்பின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. லென்ஸ் இலவசமாக இருந்தாலும், […]

ஆசியா

சீனா வந்தடைந்த வட கொரிய தலைவர்

  • September 2, 2025
  • 0 Comments

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சீனா வந்தடைந்தார். சிறப்பு கவச ரயிலில் வட கொரிய தலைவர் சீன எல்லைக்குள் நுழைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் 2019 க்குப் பிறகு முதல் முறையாக சீனாவுக்கு வருகை தருகிறார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. வட கொரிய தலைவர் வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்பது ஒரு அரிய நிகழ்வாகும், மேலும் அவர் கடைசியாக […]

விளையாட்டு

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் ஓய்வு

  • September 2, 2025
  • 0 Comments

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் அறிவித்தார். 2012 முதல் 2024 வரை 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க், 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிச்செல் ஸ்டார்க் கடைசியாக 2024 ஜூன் 24ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். கடைசியாக விளையாடிய இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்டார்க் 4 ஓவர்களில் 45 ரன்களை கொடுத்தார்.