ஆஸ்திரேலியாவில் முகமூடி அணிந்த கும்பல் தாக்கியதில் இரு சிறுவர்கள் மரணம்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், வெட்டுக்கத்தி ஏந்திய முகமூடி கும்பல் ஒன்று 12, 15 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் கத்தியால் குத்திக்கொன்றதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்தது. மேற்கு மெல்பர்னில், சந்தேகத்திற்குரிய இளையர் கும்பலைச் சேர்ந்த ஏறக்குறைய எட்டு பேர், இரண்டு சிறுவர்களையும் சனிக்கிழமை மாலை தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தாக்கியதாகக் காவல்துறை கூறியது. முதலில், ஒரு தெருவில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 12 வயதுச் சிறுவன் கிடந்ததை அறிந்ததாக விக்டோரியா மாநிலக் காவல்துறை ஆய்வாளர் கிரஹாம் […]













