பொழுதுபோக்கு

“ஸ்பைடர்மேன்” டாம் ஹாலண்ட் வைத்தியசாலையில் அனுமதி

  • September 22, 2025
  • 0 Comments

ஹாலிவுட்டில் ‘ஸ்பைடர்மேன்- பிராண்ட் நியூ டே’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. டெஸ்டின் டேனியல் இயக்கும் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது ஏற்பட்ட விபத்தில் டாம் ஹாலண்டின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் லேசாக அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்லி சிகிச்சை அளித்து வருகிறார்களாம். அதனால் டாம் ஹாலண்ட் […]

மத்திய கிழக்கு

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

  • September 22, 2025
  • 0 Comments

காசாவுக்கு எதிராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த சூழலில், லெபனான் நாட்டின் தெற்கே பின்ட் பெய்ல் நகர் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் நள்ளிரவு தொடங்கி கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் […]

பொழுதுபோக்கு

‘திரிஷயம் 3’ படம் பூஜையுடன் ஆரம்பமானது

  • September 22, 2025
  • 0 Comments

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள ‘திரிஷயம் 3’ படத்தின் பூஜை இன்று ஆரம்பமானது. மீனா, ஆஷா சரத், அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்த இதன் முதல் பாகம் 2013ல் வெளியாகி வரவேற்பைப் பெற்று 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இரண்டாம் பாகம் 2021ல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. அப்போது கொரானோ இரண்டாம் அலை இருந்ததால் தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார்கள். முதல் பாகம் படம் தமிழில் […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகை மீது கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் பரபரப்பு

  • September 22, 2025
  • 0 Comments

புஷ்பகவிமானம், புட்டாகதலு’ படங்களில் நடித்த சான்வி மேக்னா ‘குடும்பஸ்தன்’ படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். குடும்பஸ்தன் படத்தில் குடும்ப தலைவியாக நடித்தாலும், சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இசை அமைப்பாளர் சாய் அபயங்கரின் ஆல்பம் ஒன்றில் தோன்றினார். இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்றபோது, அருகில் இருந்த சூடான எண்ணெய் கொட்டி கை முழுக்க படுகாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். ‘விபத்துகள் எதிர்பாராத விதமாக நடக்கத்தான் செய்யும். மீண்டு வருவது […]

ஐரோப்பா

பால்டிக் கடலுக்கு மேலே அடையாளம் தெரியாமல் பறந்த ரஷ்ய விமானம்!

  • September 22, 2025
  • 0 Comments

ரஷ்யா அண்மைக்காலமாக பிற நாடுகளின் வான்பரப்பில் ஊடுருவி வருகின்றது. இது சர்வதேச ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) பால்டிக் கடலுக்கு மேலே அடையாளம் தெரியாத வகையில் ரஷ்யாவின் கண்காணிப்பு விமானம் ஒன்று பறந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட  ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த விமானப்படை போர் விமானங்கள் அதனை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய IL-20 உளவு விமானத்தைக் கண்காணிக்கவும் புகைப்படம் எடுக்கவும் சர்வதேச வான்வெளியில் இரண்டு ஸ்வீடிஷ் கிரிபன் […]

இலங்கை

மொரட்டுவையில் 20 வருடங்களாக ஏமாற்றி வந்த போலி வைத்தியர் கைது

  • September 22, 2025
  • 0 Comments

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தன்னை மருத்துவராகக் காட்டிக் கொண்டதாகக் கூறப்படும் 54 வயது நபர் ஒருவர் நேற்று மாலை (21) எகொட உயனவில் கைது செய்யப்பட்டார். வாதுவ, தெல்துவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், ஸ்ரீ தலருக்கராம விகாரைக்கு அருகில் சஹன சேவா என்ற பெயரில் வைத்திய நிலையத்தை நடத்தி வந்துள்ளார். அவர் வேறொரு மருத்துவருக்குச் சொந்தமான இலங்கை மருத்துவ கவுன்சிலின் (SLMC) பதிவு எண்ணை மோசடியாகப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையில், […]

ஆசியா

கைபர் பக்துன்க்வா கிராமத்தில் பாகி்ஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி

  • September 22, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் மாத்ரே தாரா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. எட்டு LS-6 என வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி […]

ஆசியா

பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சாலையில் தூக்கியெறியப்பட்ட சடலங்கள்!

  • September 22, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியின் புறநகர்ப் பகுதியில் மூன்று திருநங்கைகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல்தாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொடிய சம்பவமானது அந்நாட்டில் மூன்றாம் பாலினத்தவரின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சாலையோரத்தில் குறித்த மூன்று பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் உடல்கள் உள்ளூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெரியவராத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வட அமெரிக்கா

ChatGPT உதவியால் 150,000 டொலர் லாட்டரியை வென்ற வர்ஜீனியா பெண்

  • September 22, 2025
  • 0 Comments

ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவு உரையாடி செயலி மூலமாக தகவல்களை கேட்டு பெறுவது அதிகரித்து வருகிறது. ஆனால் இளம்பெண் ஒருவர் ChatGPT செயலியை பயன்படுத்தி லாட்டரி அடித்தது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட்ஸ். லாட்டரி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தநிலையில் அவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து ChatGPT-யிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம் என பரிந்துரைக்க கேட்டுள்ளார். அது கொடுத்த […]

ஆசியா

சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் மலேசிய பிரஜை!

  • September 22, 2025
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசிய பிரஜை ஒருவருக்கு சிங்கப்பூரில் இவ்வாரம் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள் மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், 39 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையா, இந்த ஆண்டு சிங்கப்பூரில் தூக்கிலிடப்படும் மூன்றாவது மலேசிய குடிமகனாகும். தட்சிணாமூர்த்தி 2011 இல் கைது செய்யப்பட்டார், பின்னர் சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக […]