நுகேகொடை கூட்டு அரசியல் சமர்! பிரதான கட்சிகள் கைவிரிப்பு!! 12 பிரதான கட்சிகள் பங்கேற்க மறுப்பு!!
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என எதிரணியிலுள்ள பிரதான கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. இதனால் கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பின் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமர் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுமே இக்கூட்டத்துக்குரிய அறைகூவலை விடுத்து, அதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்தன. இது தொடர்பில் எதிரணிகளுடன் பேச்சும் நடத்தப்பட்டது. தேசிய மக்கள் சக்தி […]













