இலங்கை

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண NPP அரசாங்கத்திற்கு அழைப்பு!

  • November 10, 2025
  • 0 Comments

இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ வரவு- செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்குரிய வழிவகைகள் பற்றி பேசப்பட்டது. இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதன்மூலம் இந்நாடு நன்மையடையக்கூடிய சூழ்நிலை […]

பொழுதுபோக்கு

அபிநய்-யின் உடலை வாங்கக் கூட யாரும் இல்லை..! யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது

  • November 10, 2025
  • 0 Comments

கடந்த இரண்டு வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அபிநய் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றுமொரு சோகமான செய்தியும் வந்துள்ளது. இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அதில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அபிநய் இறுதி சடங்கு செய்ய, உறவினர்கள் வருகைக்காக அவரது நண்பர்கள் மற்றும் அபிநய்க்கு நெருங்கியவர்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் அவரது உறவினர்கள் யாரும் இல்லை என்றும், பெங்களூரில் இருப்பதால் அவர்களை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தெருக்களில் படுத்துறங்கும் இலட்சக்கணக்கான மக்கள்!

  • November 10, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஏறக்குறைய 03 இலட்சம் மக்கள் வீடற்ற நிலையில் தெருக்களில் வசித்து வருவதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 299,100 குடும்பங்கள் கடுமையான வீடற்ற நிலையை எதிர்கொண்டதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலை 2012 ஆம் ஆண்டு முதல் 45 சதவீதமாக காணப்பட்ட நிலையில்,  2021 ஆம் ஆண்டில் 21 சதவீத அதிகரிப்புடன் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலையானது பிரித்தானியாவில் தனியார் வாடகை வீடுகளின் அதிகரிப்பு, குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் எண்ணிக்கை […]

ஐரோப்பா செய்தி

ஸ்லோவாக்கியாவில் (Slovakia) நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள் – பலர் வைத்தியசாலையில்!

  • November 10, 2025
  • 0 Comments

ஸ்லோவாக்கியாவில் (Slovakia) இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிராட்டிஸ்லாவா (Bratislava) பகுதியில் உள்ள பெசினோக் (Pezinok) என்ற நகரத்திற்கு அருகே நேற்று (10.11)  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பிராட்டிஸ்லாவா (Bratislava) பல்கலைக்கழக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் […]

இலங்கை

(NEW UPDATE) தலாவ பேருந்து விபத்து – உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் உயிரிழப்பு!

  • November 10, 2025
  • 0 Comments

அனுராதபுரம் – தலாவ பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று இடம்பெற்ற நிலையில், தற்போது விபத்து தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும், அவர்களில் குறைந்தது 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தலாவ பகுதியில் இருந்து கிராமம் 411 க்கு பயணித்த தனியார் பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது.   க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பயணித்த […]

உலகம் செய்தி

தென்கொரிய கடற்பரப்பில் மூழ்கிய சீன மீன்பிடி கப்பல் – பலர் மாயம்!

  • November 10, 2025
  • 0 Comments

தென்கொரியாவின் தென்மேற்கு கடற்பகுதியில் சீன மீன்பிடி கப்பல் ஒன்று கவிழ்ந்து இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 09 பேர் நீரில் மூழ்கி மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரமான கன்சானுக்கு (Gunsan) தென்மேற்கே சுமார் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் படகு கவிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கன்சானுக்கு  (Gunsan)  அருகிலுள்ள தென்மேற்கு நகரமான குவாங்ஜுவில் (Gwangju) உள்ள சீனத் துணைத் தூதரகம், படகில் 11 பேர் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. தற்போதைய […]

இந்தியா செய்தி

இந்தியாவில் ஆபத்தான நிலையில் வசிக்கும் 30 மில்லியன் மக்கள்!

  • November 10, 2025
  • 0 Comments

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நகரில் 30 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.  அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது பொது சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடியிருப்பாளர்கள் போராட்டம் நடத்த முற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைய தகவல்களின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 344 ஆக இருந்தது. இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட வெளிப்பாடு வரம்புகளின்படி ஆபத்தானதாகும். […]

பொழுதுபோக்கு

இலங்கை இளைஞர்களின் மற்றுமொரு படைப்பு “ஒரு வழி பாதை”…

  • November 10, 2025
  • 0 Comments

இலங்கை என்றால் முன்னெொரு காலத்தில் உள்நாட்டு யுத்தம் என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது இலங்கை அதிலிருந்து மீண்டு, வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இலங்கை இளைஞர்களும், நம்நாட்டுக்கு பெறுமையை தேடித்தந்துகொண்டு இருக்கின்றார்கள். வெளிநாட்டு படைப்புகளுக்கு நாம் கொடுக்கும் முன்னுரிமையை நம் நாட்டு கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த வகையில் இலங்கை இளைஞர்களின் தீவிர முயற்சியால் உருவாகியுள்ள ஒரு பாடலைப்பற்றி பார்ப்போம். ஜீவானந்தன் ராம் அவர்களின் இசையில் உருவாகிய “ஒரு வழி பாதை” என்ற பாடல். “இது ஒருவழிப்பாத […]

பொழுதுபோக்கு

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் டைட்டில் வெளியானது…

  • November 10, 2025
  • 0 Comments

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் தயாரிக்கிறது. இதில் ஜேஎஸ்கே மீடியா என்பது ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனம். இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்திற்கு ‘சிக்மா’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கூடவே படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் பணக்கட்டுகள் மற்றும் தங்கத்திற்கு மேல் சந்தீப் […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் இரு இலங்கையர்கள் சடலமாக மீட்பு!

  • November 10, 2025
  • 0 Comments

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு கியோங்சாங் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 மற்றும் 30 வயதுடைய இரு இலங்கையர்களும் 50 வயதான கொரிய மேற்பார்வையாளர் ஒருவருமாக   மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் இளம் மீன் இனப்பெருக்க பிரிவுகளுக்கு […]