இலங்கை

தாவூத் இப்ராஹிம் குழுவுடன் விடுதலைப் புலிகள் தொடர்பு? – அமைச்சர் விளக்கம்

தாவூத் இப்ராஹிம் குழுவுடன் விடுதலைப் புலிகளின் எச்சங்களாக உள்ள சிலர் இணைந்து செயற்படுகின்றனர் என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து பதிலளிக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாதாள குழு நடவடிக்கையில் ஈடுபடும் தாவூத் இப்ராஹிம் குழுவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் நேற்று இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வினவப்பட்டது.

“இது தொடர்பில் இதுவரையில் (நேற்று) எனக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இது பற்றி ஆராய்ந்து உரிய தகவலை வழங்குகின்றேன்.” என்று அமைச்சர் பதிலளித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்