சிங்கப்பூர் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட காண்டாமிருகக் கொம்புகள்!
தென்னாப்பிரிக்காவிலிருந்து ( South Africa) சிங்கப்பூர் விமான நிலையம் வழியாக லாவோஸுக்கு (Laos) கடத்தப்பட்ட விலங்குகளின் எச்சங்கள் இம்மாதத்தின் தொடக்கத்தில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) மற்றும் விமான சரக்கு கையாளுபவர் SATS இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சுமார் 35.7 கிலோ எடைக்கொண்ட காண்டாமிருகக் கொம்புகளை கடத்த முற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த பொதியில் சுமார் S$1.13 மில்லியன் (US$870,000) மதிப்புள்ள இருபது காண்டாமிருகக் கொம்புகளும், எலும்புகள், பற்கள் மற்றும் […]












