செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் ரசாயன கடத்தலில் ஈடுபட்ட சீன நிறுவன அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை

  • September 20, 2025
  • 0 Comments

போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை கடத்தியதற்காக சீன நிறுவன அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. வுஹானை தளமாகக் கொண்ட அமர்வெல் பயோடெக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி கிங்ஜோ வாங் மற்றும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் யியி சென் ஆகியோர் பிப்ரவரியில் நியூயார்க்கில் ரசாயன இறக்குமதி மற்றும் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். மாவட்ட நீதிபதி பால் கார்டெஃப், வாங்கிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சென்னுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். ஜூன் 2023ல், […]

ஆசியா செய்தி

சிறையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி சித்திரவதை செய்வதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு

  • September 20, 2025
  • 0 Comments

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், சிறையில் தன்னையும் தனது மனைவியையும் மன ரீதியாக சித்திரவதை செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளார். 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான், பல வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அல்-காதிர் டிரஸ்ட் வழக்குகளில் இருவரும் தண்டிக்கப்பட்ட பிறகு, அவரது மனைவி புஷ்ரா பிபியும் அவருடன் சிறையில் […]

இந்தியா செய்தி

டெல்லியில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • September 20, 2025
  • 0 Comments

டெல்லியில் கடந்த சில நாட்களாக பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, பொலிஸார் சோதனை நடத்திய போது மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்றும் பல பாடசாலைகளுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிபிஎஸ் துவாரகா, கிருஷ்ணா மாடல் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்புடன் வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர். தகவலறிந்த […]

ஐரோப்பா செய்தி

அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜெலென்ஸ்கி

  • September 20, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது அமெரிக்கப் பிரதிநிதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது நாடு முழுவதும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பை நடத்துவதாகவும், டிரம்புடனான பேச்சுவார்த்தையின் போது உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் ரஷ்யா மீதான தடைகள் குறித்து விவாதிப்பதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், “தலைவர்களிடையே சந்திப்பு இல்லாவிட்டால் […]

பொழுதுபோக்கு

நடிகர் மோகன்லாலுக்கு உயர் விருதை அறிவித்தது மத்திய அரசு

  • September 20, 2025
  • 0 Comments

நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருபவர். மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. 2023ம் ஆண்டுக்கான இந்த விருது தேசிய விருது வழங்கும் விழாவில் சேர்த்து வழங்கப்படும் எனவும் அரசு கூறி இருக்கிறது. மோகன்லாலுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 2019ம் ஆண்டுக்கான விருது […]

செய்தி விளையாட்டு

Asia Cup – 168 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

  • September 20, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா 22 ஓட்டங்களுக்கும் , குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் காதலிப்பவர்களுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை!

  • September 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒன்லைன் மோசடிகளால் ஆண்டுக்கு 106 மில்லியன் பவுண்ட்ஸிற்கும் அதிமான தொகை இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்லைன் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காதல் மோசடிகள் மோசமடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனிமையில் இருப்பவர்களை முதலில் காதல் வலையில் வீழ்த்தும் மர்ம நபர்கள் பின்னர் அவர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு மெல்ல மெல்ல அவர்களை ஏமாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Crimestoppers வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் காதல் மோசடிகளால் […]

பொழுதுபோக்கு

தனுஷின் இட்லி கடை ட்ரெய்லர் வெளியானது

  • September 20, 2025
  • 0 Comments

தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அப்பாவின் இட்லி கடையை காப்பாற்ற உயிரை கொடுத்து போராடும் ஹீரோ. அதை அழிக்காமல் போக மாட்டேன் என மிரட்டும் வில்லன் அருண் விஜய். மிரட்டலான ட்ரெய்லர் பார்வையாளர்களை ஈர்க்கின்றது.

ஐரோப்பா முக்கிய செய்திகள்

நேட்டோவை சீண்டி பார்க்கும் ரஷ்யா – 03 ஆம் உலக போர் தொடர்பில் விழிப்புடன் இருக்கும் நாடுகள்!

  • September 20, 2025
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பெலாரஸுடன் மேற்கொண்ட போர் பயிற்சியை தொடர்ந்து தற்போது அவ்வவ்போது நேட்டோ நாடுகளை சீண்டி பார்த்துவருகிறார். முதலில் ஜார்ஜியாவிற்குள் ரஷ்யாவின் ட்ரோன்கள் நுழைந்திருந்தது. இந்த விடயம் தணிவதற்குள் அடுத்ததாக எஸ்டோனியாவிற்குள் போர் விமானங்கள் நுழைந்திருந்தன. இது உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யா தனது எல்லைகளை விரிவுப்படுத்த நோட்டமிடுவதாக பல்வேறு தரப்பினரும் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் கூட்டணிக்கு எதிரான எதிர்கால மோதல்களுக்கான பாடங்களைக் கற்றுக்கொள்ள விளாடிமிர் புடின் வேண்டுமென்றே நேட்டோவைத் தூண்டிவிடுகிறார் என்று […]

பொழுதுபோக்கு

ரோபோ சங்கர் கூறிய இறுதி வார்த்தைகள்

  • September 20, 2025
  • 0 Comments

தமிழ் சின்னத்திரையில் தனது திறமை மூலம் நுழைந்து எல்லோரையும் சிரிக்க வைத்து வந்தவர் ரோபோ ஷங்கர். அவர் வேலைக்கு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்த ஒரு காமெடி காட்சி இப்போதும் நின்று பேசும், அன்னைக்கு காலைல 6 மணி இதை மறக்கவே முடியாது. ரோபோ ஷங்கர் எப்போதுமே தூக்கம் வரவில்லை என்று தான் கூறுவான். காலையில் 8 மணிக்கு படப்பிடிப்பு போக வேண்டும் என்றால் 4 மணிக்கு எழுந்து தூக்கம் வரவில்லை என டிவி போட்டு உட்காருவான். […]