பொழுதுபோக்கு

சக்கைபோடு போடும் “லோகா” அதிகாரபூர்வ வசூல் அறிவிப்பு

  • September 4, 2025
  • 0 Comments

நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள ‘லோகா’ திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் அசத்தி வருகிறது. எதிர்பாராத அளவிற்கு லோகாவுக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்து வருவதால் தமிழகத்திலும் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தப் படம் உலகம் […]

வட அமெரிக்கா

வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கடத்தும் கப்பல் மீதான அமெரிக்க தாக்குதலில் 11 பேர் பலி ; டிரம்ப்

  • September 4, 2025
  • 0 Comments

தென் அமெரிக்கா நாடுகளான மெக்சிகோ, வெனிசுலா, சிலி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து தென்அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை ஒழிப்பதாக கூறினார். குறிப்பாக, வெனிசுலா நாட்டில் 3-வது முறையாக அதிபராக உள்ள நிகோலஸ் மதுரோ, உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக செயல்படுவதாக விமர்சித்தார். போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து அமெரிக்காவுக்கு தொடர்ந்து போதைப்பொருள் கடத்துவதாக குற்றஞ்சாட்டினார். வெனிசுலா அதிபரின் இரட்டை […]

பொழுதுபோக்கு

ரஜினியின் தோல்வியை பார்ட்டி வைத்து கொண்டாடிய விஜய்… வெளிவந்த இரகசியம்

  • September 4, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளிவந்தது. விமர்சன ரீதியாக பின்னடைவை இப்படம் சந்தித்தாலும் கூட, வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை கூலி உலகளவில் ரூ. 515 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரஜினிகாந்தை போலவே சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வரவேண்டும். அவருடைய இடத்தை பிடிக்கவேண்டும் என முயற்சி செய்த பலரில் ஒருவர் நடிகர் விஜய். ரஜினியின் தீவிர ரசிகரும் ஆவார். இதை […]

இந்தியா

ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளை கூடுதலாக வாங்க இந்தியா முடிவு

  • September 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வரிவிதிப்பு சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ‘எஸ்-400’ வகை வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக, இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து, குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்கு அபராதமாக, 25% கூடுதல் வரிவிதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனால் இந்திய வர்த்தகர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா […]

பொழுதுபோக்கு

சம்பளமே வாங்காமல் 6 மணி நேரம் மணிமேகலை செய்த வேலை…

  • September 4, 2025
  • 0 Comments

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தார். ஆனால், கடந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதன்பின், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் தற்போது சிங்கள் பசங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். எந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து […]

வட அமெரிக்கா

அமெரிக்கா இல்லாமல் உலகம் அழிந்துவிடும் – டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

  • September 4, 2025
  • 0 Comments

அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும் எனஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார். “எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன். ஆனால், ஜோ பைடன் நிர்வாகம் செய்த செயல்களால் சீரழியத்துவங்கியது. வரிகள் மூலம் அமெரிக்காவின் நிதி பலம் பெற்று வருகிறது. வரி காரணமாக அதிகளவு பணம் வருகிறது. நமக்கு அனைத்தையும் வரி பெற்று தருகிறது. அமெரிக்கா இல்லை என்றால் உலகில் உள்ள […]

இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்த யாழ் மாணவன்

  • September 4, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் […]

வாழ்வியல்

பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய இளநீரின் பயன்கள்

  • September 4, 2025
  • 0 Comments

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது. மேலும், இளநீர் குடிப்பவர்கள் மிகுந்த உடல் ஆரோக்கியத்தோடு காணப்படுவார்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிய, இலத்தின், அமெரிக்க நாடுகளில் இளநீர் மிகச்சிறந்த குளிர் பானமாக அருந்தப்பட்டு வருகிறது. இதனைப் பாரம்பரிய மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இளநீரின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வோம். *இளநீர் வயிற்றுப் போக்கைத் தடுக்கக் கூடியது. *இளநீர் அடிக்கடி அருந்தி வந்தால், இதயத்திற்கு பலம் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் உக்ரைனை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவோம் – புட்டின் எச்சரிக்கை

  • September 4, 2025
  • 0 Comments

பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், உக்ரைனை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சீனாவில் நடந்த ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். சீனா தனது இராணுவ சக்தியை உலகிற்கு வெளிப்படுத்தியதுடன், தனது சமீபத்திய ஆயுதங்களையும் வெளியிட்டது. இதற்கிடையில், உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபரை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.

உலகம்

கச்சா எண்ணெய் கொள்முதல் – இந்தியாவுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் ரஷ்யா

  • September 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வர்த்தக சவால்களுக்கு மத்தியில், இந்தியாவிற்கு விற்கப்படும் எரிபொருளுக்கு மேலும் தள்ளுபடி வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியா ஆர்டர் செய்த கச்சா எண்ணெய் இருப்புகளுக்கு பீப்பாய்க்கு $3 முதல் $4 வரை மற்றொரு தள்ளுபடி வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்கா 50 சதவீதமாக உயர்த்திய சூழலில், ரஷ்யா இந்தியாவிற்கு விற்கும் எரிபொருளுக்கு இதுபோன்ற தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியாவுக்கு […]