CID வசமாகும் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் உயர்மட்ட அரசு அதிகாரிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், […]













