பாலி தீவில் உள்ள ஒரு வில்லாவில் ஆஸ்திரேலிய நபர் ஓருவர் சுட்டு கொலை
இந்தோனீசியாவின் பாலித் தீவில் ஆஸ்திரேலிய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.மற்றோர் ஆஸ்திரேலிய நபரும் சுடப்பட்டுக் காயமடைந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை (ஜூன் 14) அதிகாலை நிகழ்ந்ததாகக் காவல்துறை, ஊடகங்களிடம் தெரிவித்தது. துப்பாக்கிக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை பாலிக் காவல்துறை தேடி வருகிறது. துப்பாக்கிச்சூடு பாலியின் பண்டுங் வட்டாரத்தில் உள்ள பங்களா ஒன்றில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று காவல்துறைப் பேச்சாளர் அரியசாண்டி குறிப்பிட்டார். துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானவர்கள் ஸிவன் ஆர், 32, என்றும் சனார் ஜி, 35, என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸிவன் […]













