செய்தி

சிலி நாட்டை உலுக்கிய சக்திவாய்ந்த நில அதிர்வு!

  • January 3, 2025
  • 0 Comments

சிலி நாட்டை உலுக்கிய சக்திவாய்ந்த நில அதிர்வு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்நில அதிர்வு 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நில அதிர்வானது பூமியிலிருந்து 104 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தியா

இந்தியாவில் கடுமையான பனிமூட்டம் : தாமதத்தை எதிர்கொள்ளும் விமான பயணிகள்!

  • January 3, 2025
  • 0 Comments

கடுமையான பனிமூட்டம் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று (03.01) காலை குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸுடன் தொடங்கியது .  இது தொடர்ந்து ஐந்தாவது குளிர் நாளைக் குறிக்கிறது. கடுமையான பணிமூட்டம் காரணமாக விமான சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை பயணிகள் எதிர்நோக்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டாலும், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் தாமதத்தை எதிர்கொண்டன. மேலும் […]

பொழுதுபோக்கு

பிரம்மாண்டமும், அதிரடியும் இணைந்தால் இப்படித்தான் இருக்கும் – “கேம் சேஞ்சர்” ட்ரெய்லர்

  • January 3, 2025
  • 0 Comments

நடிகர் ராம்சரண் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர்படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தின் மூலம் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஷங்கர். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் லாஞ்ச் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடந்துள்ளது. இதில் ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினர்பங்கேற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராஜமௌலியும் […]

இன்றைய முக்கிய செய்திகள் கருத்து & பகுப்பாய்வு

2025ஆம் ஆண்டில் என்ன நடக்கும்? லண்டன் தீர்க்கதரிசியின் கணிப்பால் மக்கள் அச்சம்!

  • January 3, 2025
  • 0 Comments

ஏற்கனவே கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு கணிப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உலகமே புத்தாண்டு கொண்டாடி வரும் நிலையில், தீர்க்கதரிசி ஒருவர் கூறிய கருத்து பேசப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டு பிறந்த நிலையில், பலரும் இந்த ஆண்டாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்து வருகின்றனர். அப்படி பல ஜோதிடர்கள் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 38 வயதுடைய நபர் ஒருவர் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

கைதிகளும் மனிதர்களே! அவர்களை கண்ணியத்துடன் நடத்துங்கள் – இலங்கை நீதவான்!

  • January 3, 2025
  • 0 Comments

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசான் அமரசேன அறிவுறுத்தியுள்ளார். திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது அவர்களை சங்கிலியால் பிணைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார். தடுப்புக் காவலில் உள்ளவர்களும் மனிதர்கள் என்றும், அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படத் தகுதியானவர்கள் என்றும் அவர் அதிகாரிகளுக்கு நினைவூட்டினார். நீதிமன்ற அறைக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்றை அவதானித்த பின்னர் மேலதிக நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் […]

செய்தி வாழ்வியல்

தினமும் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் 3 அற்புதமான நன்மைகள்

  • January 3, 2025
  • 0 Comments

குளிர்காலம் அல்லது கோடை காலம் எதுவாக இருந்தாலும், அனைத்து பருவங்களிலும், நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் மூலம் நாம் நமது உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கலாம். இது உடல் எடையை குறைக்கவும் பெரிய அளவில் உதவும். பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாகவும் நடைப்பயிற்சி உள்ளது. நடைபயிற்சியை ஒரு அன்றாட பழக்கமாக வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது மிக நல்லது. இதை அனைவராலும் எளிதாக செய்ய முடியும். தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும், அல்லது […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 28 வயதான இளைஞர் மாயம் : இறுதியில் நேர்ந்த துயரம்!

  • January 3, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மாயமான 28 வயதான நபர் சுறாவின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான சர்ஃப் கடற்கரையில் அவர் இறுதியாக அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு குறித்த நபர் வெள்ளை சுறாவால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவசர உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறினார். 1791 முதல் 27 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் 255 அபாயகரமான சுறா தாக்குதல் பதிவாகியுள்ளமை […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த தென்கொரியா

  • January 3, 2025
  • 0 Comments

உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. World of Statistics இணையதளத் தரவுகளின்படி, இந்த ஆய்வு உலகில் மூன்றாம் நிலைக் கல்வி வரை படித்தவர்களை அடிப்படையாகக் கொண்டது. இங்கு 24 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்களின் கல்வி கண்காணிக்கப்பட்டது. இதன்படி, உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடாக தென்கொரியா பெயர் பெற்றுள்ளதுடன், அந்த வயதிற்குட்பட்டவர்களில் 69 சதவீதம் பேர் கல்வி கற்றவர்கள் என்பது சிறப்பம்சமாகும்.. அந்த தரவரிசையில் […]

வட அமெரிக்கா

ஆபத்தான வலிகளை பொருட்படுத்தாமல் புலம்பெயரும் தென் அமெரிக்கர்கள் – 2024 இல் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • January 3, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டில் 300,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் டேரியன் இடைவெளியைக் கடந்து பனாமாவிற்குச் சென்றுள்ளனர். இது ஒரு வருடத்திற்கு முன்னர் தென் அமெரிக்காவிலிருந்து ஆபத்தான காட்டைக் கடந்த சாதனை எண்ணிக்கையை விட 42% குறைவு என்று பனாமாவின் இடம்பெயர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆபத்தான டேரியன் கேப் கொலம்பியாவை மத்திய அமெரிக்க நாடான பனாமாவுடன் இணைக்கிறது. அமெரிக்காவை அடைய நினைக்கும் பலர் இந்த ஆபத்தான வலியை பின்பற்றுகின்றனர். பனாமேனிய ஜனாதிபதி ஜோஸ் ரவுல் முலினோ கடந்த ஜூலை […]

ஆசியா

தென்கொரிய ஜனாதிபதியை கைது செய்ய அவரின் வீட்டிற்குள் பிரவேசித்த புலனாய்வாளர்கள்!

  • January 3, 2025
  • 0 Comments

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் இன்று (03.01) புலனாய்வாளர்கள்  சியோலில் உள்ள அவரின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியின் ஆதரவாளர்களின் கூட்டமும், பொலிஸாரின் வாகனங்களும் அவரின் வீட்டின் வெளியே நிறைந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குடியிருப்பில் இருந்து அதிகாரிகளைத் தடுக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் காவல்துறையின் முன் படுத்திருப்பதை புகைப்படங்கள் காட்டுகின்றன. rர்வதேச ஊடகம் ஒன்று அதிகாரிகள் யூனின் சொத்தின் நுழைவாயிலுக்குள் […]