இந்தியா செய்தி

சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்குபரிசு தொகை அறிவித்த மு.க.ஸ்டாலின்

  • January 5, 2025
  • 0 Comments

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . மேலும், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த மேனாள் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் . தொடர்ந்து […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

ஹிலாரி கிளிண்டன் உட்பட 19 பேருக்கு அமெரிக்காவின் உயரிய விருதை வழங்கிய ஜோ பைடன்

  • January 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஆற்றிய பங்களிப்பிற்காக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, சர்ச்சைக்குரிய பரோபகாரர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் நடிகர் டென்சல் வாஷிங்டன் உட்பட 19 பேருக்கு அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதை பதவி விலகும் அதிபர் ஜோ பைடன் வழங்கினார். அமெரிக்காவின் செழிப்பு, மதிப்புகள் அல்லது பாதுகாப்பு, உலக அமைதி அல்லது பிற குறிப்பிடத்தக்க சமூக, பொது அல்லது தனியார் முயற்சிகளுக்கு பங்களித்த நபர்களுக்கு சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் […]

செய்தி விளையாட்டு

தொடர்நாயகன் விருதை வென்ற ஒன்மேன் ஆர்மி.. பும்ராவுக்கு கிடைத்த கவுரவம்

  • January 5, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற மோசமான அளவில் தொடரை இழந்தது. ஆனால், தொடர் நாயகன் விருது இந்திய அணியின் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. பொதுவாக தொடர் நாயகன் விருது என்பது வெற்றி பெற்ற அணியை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும். உலகக்கோப்பை போன்ற சில தொடர்களில் மட்டுமே தொடர் நாயகன் விருது கோப்பை […]

உலகம் செய்தி

ஈகுவடோரில் இராணுவ அவசரநிலை பிரகடனம்!

  • January 5, 2025
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் பல கிளர்ச்சிக் குழுக்கள் செயற்படுகின்றன. அவற்றில் பல குழுக்களை பயங்கரவாத அமைப்புகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த குழுக்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதன் காரணமாக குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்நாட்டுக்கலவரம் நிலவுகின்றது. எனவே அந்நாட்டின் ஜனாதிபதி டேனியேல் நோபோவா குறித்த மாகாணங்களுக்கு இராணுவ அவசர நிலையினை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் […]

ஐரோப்பா செய்தி

நோர்வேயில் அடுத்த சில நாட்களில் அதிக அளவு பனிப்பொழிவு

  • January 5, 2025
  • 0 Comments

நோர்வேயில் அடுத்த சில நாட்களில் அதிக அளவு பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வரை நார்வேயில் 60 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படலாம். அதிகாரிகள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நோர்வேஜியர்கள் வரவிருக்கும் நாட்களில் வாகனத்தில் பயணிக்க விரும்பினால் ஒரு முறைக்கு, இருமுறை யோசிக்க வேண்டும். திங்கட்கிழமை அதிகாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை இந்த எச்சரிக்கை பொருந்தும்.

இலங்கை செய்தி

பெண்களை தொந்தரவு செய்யும் நபர்கள்:சம்மாந்துறை பொலிஸார் விடுத்த அறிவித்தல்

  • January 5, 2025
  • 0 Comments

சம்மாந்துறையில் உள்ள பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கும் போது அல்லது முடிவடையும் போது பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் விடயம் தொடர்பில் தகவல் […]

இலங்கை செய்தி

பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

  • January 5, 2025
  • 0 Comments

கொழும்பு பங்குச்சந்தை வரலாற்றில் கண்டிராத நிலையை எட்டியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நாங்கள் பொருளாதாரத்தை முறையாக நிர்வகித்து வருகிறோம். இன்று பங்குச் சந்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது, ஆனால் மாபெரும் பொருளாதார மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட ரணிலின் காலத்தில் அது நடக்கவில்லை. மஹிந்த, ரணில்லா அரசுகளால் நீண்ட காலம் ஆளப்பட்டு அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளதால் எமது அரசாங்கத்திடம் இருந்து மக்கள் அற்புதங்களை […]

இலங்கை செய்தி

நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி கைது

  • January 5, 2025
  • 0 Comments

இரண்டு நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி, பொது பாதுகாப்பு பரிசோதகர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த மூடைகள் பலாங்கொடை நகரின் கடைகளுக்கு விநியோகிக்க பணி மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தது. சம்பவம், பலாங்கொடை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கடையின் அருகே நடைபெற்றது. அங்கு, லொறியில் அரிசி மூட்டைகளை இறக்கும் பொழுதில், நாய்கள் மூட்டைகளுக்கு இடையில் இருந்ததை கண்டெடுத்த ஒரு நகரவாசி, அதை கைத்தொலைபேசியில் பதிவு செய்து பொது பாதுகாப்பு பரிசோதகர்களுக்கு அனுப்பினார். அதன்பேரில், […]

இலங்கை செய்தி

அரசாங்க ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை

  • January 5, 2025
  • 0 Comments

அரசாங்க ஊழியர்களின் சேவைக் காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபடுவதற்காக சம்பளம் அற்ற விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதற்கிணங்க மேற்படி விடுமுறையை அங்கீகரிப்பதில் மாவட்டச் செயலாளர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்கள் தொடர்பில் இதில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2022 ஜூன் மாதம் 22 ஆம் திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி […]

இலங்கை செய்தி

திரிபோஷ நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்த தீர்மானம்

  • January 5, 2025
  • 0 Comments

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த திரிபோஷ நிறுவனத்தை அபிவிருத்தி செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கங்கள் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத […]