இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த நபர் கட்டுநாயக்க விமானத்தில் கைது

  • November 24, 2024
  • 0 Comments

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு டுபாயில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் வந்த நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 59,980 சிகரெட்டுகளை வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொட்டாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவராகும். சம்பவம் […]

செய்தி

ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கான கவசம் – போலந்தின் நடவடிக்கையால் கோபத்தில் புட்டின்

  • November 24, 2024
  • 0 Comments

போலந்தின் பால்டிக் கடற்கரையோரம் உள்ள ரெட்சிக்கோவோ (Redzikowo) என்ற நகரில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பாலிஸ்ரிக் ஏவுகணைப் பாதுகாப்புத் தளம் (US ballistic missile defence base) கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய ஏவுகணைகளில் இருந்து ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கான கவசம் எனக் கருதப்படுகின்ற இந்தத் தளம், அணு ஆயுத மோதலுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்துள்ளது என்று மொஸ்கோ குற்றம் சுமத்தி உள்ளது. அழிக்கப்படவேண்டிய பிரதான இலக்குகளின் பட்டியலில் அதனைச் சேர்த்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் திடீரென பச்சை நிறமாக மாறிய கால்வாய் – மக்களுக்கு எச்சரிக்கை

  • November 24, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் – மெல்போர்னின் மேற்குப் பகுதியில் உள்ள கால்வாயில் பச்சை நிறமாக மாறியிருப்பதால், அருகில் வசிக்கும் மக்கள் தண்ணீரில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். Cruickshank Parkஇல் அமைந்துள்ள Stone கால்வாயில் உள்ள நீர் பிரகாசமான பச்சை நிறமாக மாறியதன் காரணமாக சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை (EPA) விக்டோரியா மாநிலத்திற்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவுநீர் மற்றும் நிலத்தடி குழாய்களில் உள்ள கசிவுகள் மற்றும் அடைப்புகளை சரிபார்க்க பிளம்பர்கள் பயன்படுத்தும் பிரகாசமான சாயமான ஃப்ளோரசெசின் கசிவு காரணமாக நீரில் […]

ஐரோப்பா

புட்டினின் ஏவுகணை மிரட்டல் – நேட்டோ கூட்டணியை விரைவில் சந்திக்க தயாராகும் உக்ரைன்

  • November 24, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதிய ஏவுகணைகள் இருப்பில் உள்ளதாக அறிவித்து மிரட்டல் விடுத்துள்ளார். அந்த அறிவிப்பு மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது அதிவேக ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்த பிறகு அவர் அவ்வாறு கூறினார். உக்ரைன் அமெரிக்க, பிரித்தானிய ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்சியது. அதற்குப் பதிலடியாக அதிவேக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக புட்டின் குறிப்பிட்டார். ரஷ்யாவின் அண்மைத் தாக்குதலைத் தொடர்ந்து, நேட்டோ கூட்டணியை விரைவில் சந்தித்துப் பேசுவதற்கு உக்ரைன் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

தனது உலக சாதனையை தானே முறியடித்து சாதனை படைத்த எலோன் மஸ்க்

  • November 24, 2024
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் மேலும் பணக்காரராகி தனது சாதனையை அவரே முறியடித்துள்ளார். அதாவது மஸ்க்கின் நிகர மதிப்பு 347.8 பில்லியன் டொலர்களாகும். Bloomberg Billionaires Index வெளியிட்ட தகவலுக்கமைய, டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 2021ஆம் ஆண்டுநவம்பர் மாதம் 340 பில்லியன் டொலரை தாண்டியுள்ளனர். அதன்பிறகு, அவர் படைத்த சாதனைகளை அவரே முறியடித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு டெஸ்லாவின் […]

ஐரோப்பா

உலகின் 10 சிறந்த நகரங்களில் முதலிடம் பிடித்த லண்டன்

  • November 24, 2024
  • 0 Comments

Time Out இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் லண்டன் முதலிடம் பிடித்துள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான Resonance Counsltancy ஆல் செய்யப்பட்ட இந்த தரவரிசை, வாழ்வாதாரம், அன்பான தன்மை மற்றும் செழிப்பு ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் இடம் இங்கிலாந்தின் லண்டனுக்கும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும், பிரான்சின் பாரிஸுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஜப்பானின் டோக்கியோ […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனிதனை விட குற்றவாளிகளாக மாறிய AI ரோபோ!

  • November 24, 2024
  • 0 Comments

நாளுக்கு நாள் AI ரோபாேக்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தன் சக ரோபோக்களை கடத்தி, வேலையை ரிசைன் செய்ய சொல்லியிருக்கிறது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நவீன உலகில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வினோதமான நிகழ்வுகள் குறித்து, யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. ஏற்கனவே டிஜிட்டல் சாதனங்கள் நம் நேரத்தையும் பணத்தையும் ஆக்கிரமித்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல ரோபோக்களின் பிடியில் மனிதர்கள் […]

அறிந்திருக்க வேண்டியவை

செவ்வாய் கிரகத்தில் விழுந்த விண்கல் – ஏலியன்கள் குறித்து வெளிவரும் மர்மம்

  • November 24, 2024
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் விழுந்த விண்கல் ஊடாக வேற்றுகிரகவாசிகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. சமீபத்திய சான்றுகள் செவ்வாய் கிரகத்தில் பண்டைய காலத்தில் சூடான நீர் ஓடியதற்கான ஆதாராத்தை காட்டுகின்றன. இப்போது அங்கு வறண்ட நிலைமைகள் இருந்தபோதிலும், சிவப்பு கிரகம் பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததை காட்டுகிறது. இந்த சமீபத்திய தகவல் 2011-ல் சகாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டNWA7034 என்ற செவ்வாய் கிரக விண்கல் மூலம் தெரியவந்தது. 4.45 பில்லியன் ஆண்டுகள் […]

செய்தி

பும்ராவின் பந்துவீச்சில் சந்தேகம் – கதறும் ஆஸ்திரேலிய ரசிகர்கள்!

  • November 24, 2024
  • 0 Comments

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து, 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய […]

ஐரோப்பா

பிரான்சை சூறையாடிச் சென்ற பனிப்புயல் – மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்

  • November 24, 2024
  • 0 Comments

பிரான்சை சூறையாடிச் சென்ற பனிப் புயலினால், மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் 270,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டிருந்தது. அவற்றில் 85% சதவீதமான வீடுகளுக்கு மின்சாரம் மீள வழங்கப்பட்டுள்ளதாக மின் வழங்குனர்கள் அறிவித்துள்ளனர். சனிக்கிழமை காலை முதல் இரவு வரையில் 45,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்னும் 33,000 வீடுகளுக்கு இரண்டாவது நாளாக மின் தடை ஏற்பட்டுள்ளது. தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மின் இணைப்பை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Normandy மாவட்டத்தில் […]